எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா

எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
News Image

தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. சட்டசபை தொகுதி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இல்லை. ஆட்சியை இழந்த பிறகு ஒரு அரசியல் கட்சிக்கு இவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் இந்தியாவிலேயே வேறு எந்த கட்சியாலும் முடியாது. கவர்ச்சி அரசியல், பொய் பேசுதல், பாட்டு பாடுதல், அரசியல் நாகரிகமற்ற பேச்சு போன்றவை எனக்கு தெரியாது. ஒரு அநாகரிகமான மனிதன் ஆட்சி கட்டிலில் இருக்கிறார் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிட்டார் என முதலமைச்சர் பேசுகிறார்.  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எ.வ.வேலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. சில பிரச்சனைகள் இருந்தது. இதற்காக கடந்த மாதம் 25 ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக 17ஆம் தேதி டிக்கெட் போடப்பட்டது. ஆனால் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில், காலையில் 6 மணிக்கு எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் அன்றைய தினம் சிங்கப்பூர் செல்லாமல் இரண்டு நாள் கழித்து சென்றார். லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு கொடுத்து கையெழுத்திட்ட பிறகு தான் அடுத்த 2 நாட்கள் பிறகு தான் சிங்கப்பூர் சென்றார்.

எனவே யார் எங்கே இருக்கிறார்கள்.? எதற்காக போனார்கள் என்று முதல்வருக்கு தெரியாதா.? முதலமைச்சருக்கு உளவுத்துறை என ஒன்று உள்ளது தெரியாதா.? என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் பொய் பொய்யாக பேசுகிறார். பொய்க்கு அளவே இல்லையா.?முதலமைச்சர் பொய் பேசலாமா.? காமராஜ் ராஜாஜி உட்கார்ந்த இடத்தில் பொய்யர் உட்கார்ந்துள்ளார் என கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை விரிவாக்கம் செய்து கொண்டு இருக்கிறார் இன்றைய முதல்-அமைச்சர். இவர் முதல்-அமைச்சர் இல்லை. திட்ட விரிவாக்க அலுவலர் தான். செந்தில்பாலாஜி ஓடுகிறார் என்று விஜய் சொல்கிறார். ஒரு வழக்கு போடும்போது அந்த வழக்கில் ஜாமீன் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம். நீங்கள்(விஜய்) போடுவது பொய் வழக்கு. பொய் வழக்கில் இருந்து தப்பித்து கொள்ள சட்டவழிமுறை இருக்கிறது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks