சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி மாசடைந்துள்ளதால் ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

புழல் ஏரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆய்வு செய்தார். ஏரி மாசடைந்து வருவதாக வந்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய், புழல் ஏரியில் நீர் பிடிப்பு பகுதி குப்பைகள் கொட்டும் இடம் என ஆய்வு செய்த அவர், இதுதொடர்பாக ஏபிபி நாடு-க்கு பேட்டியும் கொடுத்தார். அதில், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் புகழ்பெற்று விளங்கக்கூடிய புழல் ஏரி முழுவதுமாக மாசு அடைந்து உள்ளதாகவும், கழிவு நீர் கலந்து,கோழி கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும், சென்னைக்கு குடிநீர் தரும் புகழ் வாய்ந்த ஏரி, சிதிலமடைந்து சீர்கெட்டு இருப்பதாகவும், ஆடு மாடுகள் மேய்கின்றது எளிய மனிதர்கள் காலை கடனை இங்கு கழிக்கின்றனர், இறந்தவர்களின் ஈமச்சடங்கு குப்பைகளை இங்கே வீசி செல்கின்றனர் எனவும் கூறினார்.

பாழடைந்து கிடக்கும் புழல் ஏரி

மேலும், சென்னை மக்களுக்கு குடிநீர் தரும் இந்த ஏரி நிகழ் கால சென்னை மக்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சென்னை மக்களுக்கும் இது கேட்பாரற்று பாழடைந்து பல ஆண்டுகளாக கிடக்கிறது எனவும், ஆட்சியாளர்கள் உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்தி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும், சீர்படுத்த வேண்டும் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரகடம், திருமுல்லைவாயில், கள்ளிகுப்பம் மற்றும் பல பகுதிகள் இந்த ஏரியை சுற்றி இருக்கிறது, இந்தப் பகுதி மக்களுக்கும் இது பயன்படுகிறது, சென்னை மக்களுக்கும் இது குடிநீருக்கு பயன்படுகிறது எனவும், இதில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த ஏரியை காப்பாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருமே இதுகுறித்து கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும் எனவும், நீர் ஆதார ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை எனவும், காலம் கடத்தாமல் துரித நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் இந்த ஏரிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Source: Read Full Article