"அரசு பஸ்களில் இனி இதுவும் செய்யலாமா?.. நஷ்டத்தைப் போக்க இறக்கப்பட்ட புதிய பிளான்!"

"அரசு பஸ்களில் இனி இதுவும் செய்யலாமா?.. நஷ்டத்தைப் போக்க இறக்கப்பட்ட புதிய பிளான்!"
News Image

தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், வருவாயைப் பெருக்கவும் முதல் கட்டமாக 1,000 அரசு விரைவுப் பேருந்துகளில் 'பார்சல்' அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடன் சுமையும், மாற்று வருவாய் வழிகளும்

தமிழகத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் சுமார் 21,515 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 43,865 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவி. சிவசங்கர் (பார்த்திபன்) மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, புதிய திட்டங்களைச் செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வருவாயைப் பெருக்கும் பிற திட்டங்கள்

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், "கட்டண உயர்வின்றி இதர வழிகளில் வருவாயைப் பெருக்க பல்வேறு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள நிலங்களைத் தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்துவது மற்றும் பஸ் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என்றனர்.

புதிய பஸ்களில் பார்சல் வசதிக்கான சிறப்பு இட ஒதுக்கீடு

உடனடியாகச் செயல்படுத்தப்படும் நடவடிக்கையாக, வெளியூர் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல்களை ஏற்றிச் செல்லும் வசதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக பார்சல் வசதியுடன் கூடிய புதிய பேருந்துகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தங்களது பயணத்தின் போது கையோடு எடுத்துச் செல்ல முடியாத பெரிய பொருட்கள் மற்றும் லக்கேஜ்களை 'பார்சல்' ஆக புக்கிங் செய்து, அதற்கான நியாயமான கட்டணத்தைச் செலுத்தி எடுத்துச் செல்லலாம். இதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பேருந்துகளின் பின்பகுதியில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக, சென்னை உட்படத் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் 1,000 அரசு விரைவுப் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks