பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!

பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரமுகர்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
News Image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிபிசிஐடி சோதனை நடைபெற்று வருகிறது.

பழனி நில மோசடி விவகாரம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடிவாரத்தில் உள்ள சன்னிதி வீதியில் கோயிலுக்கு சொந்தமான  1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

அதிகாரிகள் இடமாற்றம் காரணமாக பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரே ஒருநாள் சார்பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகித்த ஜஸ்டின் மணிகண்டன் இந்த பத்திரப்பதிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவது. உடனடியாக ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நிலத்தை பதிவு செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளத்துரை, சேதுபதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்றம் மூலம் இந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேட்டை கண்டறியும் பொருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நிலம் பதிவான அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சென்றவர்கள் விவரம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ரெய்டு

இதனிடையே சிபிசிஐடி போலீசார் பழனி சார்பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கலில் உள்ள இல்லத்தில் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வெள்ளத்துரை, முருகதாஸ், சேதுபதி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே நிலம் விற்கப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலியில் மேடை அலங்கார தொழில் செய்யும் சண்முக சுந்தரத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் நெல்லையிலும் சோதனை நடக்கிறது.

Also Read: பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்

திமுக பிரமுகருக்கு தொடர்பா?

மேலும் ஒட்டன்ச்சத்திரத்தைச் சேர்ந்த நில தரகர் ஜெயப்பிரகாஷ், சாட்சி கையெழுத்து போட்டதாக திமுக 27வது வார்டு செயலாளர் லட்சுமணன் வீடுகளிலும் சிபிசிஐடி சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மீது திமுக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் திமுக பிரமுகரே இந்த மோசடிக்கு துணை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நில மோசடி இருக்கும் அந்த பெரிய புள்ளி யார் என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது. வெளிப்படையான நிர்வாகம் என சொல்லிக் கொள்ளும் தவெக, உண்மையான குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks