பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!
பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!
News Image
பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் அது தவெகவினராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
பள்ளியில் ஒளிபரப்பான விஜய் நிகழ்ச்சி
கரூரில் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று திமுக கடுமையாக சாடினார். இந்த பேச்சை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்து மாணவ, மாணவியர்களை பார்க்க வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
திமுகவுக்கு பதிலடி கொடுத்த தவெக
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், “2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித் துறை கூட்டத்தை நடத்திக் கொண்டவர்கள் தான் இந்த ஓடுகாலி முன்னேற்றக் கழகப் பண்ணையார்கள்.
2024 நவம்பர் மாதம் உதயநிதி பிறந்தநாளின்போது, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என அப்போதே பாடிக்கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து உதயநிதிக்கு “Happy Birthday” வாழ்த்து கூறும் வீடியோவை வெளியிட்ட விளம்பர வெறியர்கள்… இன்று ஒட்டுமொத்தமாக நல்லவர் வேடம் கட்டி நடிக்கிறார்கள்!
Also Read: TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் மகத்தான பிஞ்சு மாணவர்களின் கரங்களில் மையை ஊற்றி, கைரேகை (Thumbprint) மூலம் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை உருவாக்கி, பிறந்தநாள் பரிசாக அளித்தவர்கள் நீங்கள் தான்.
பள்ளிக்கூடங்களை ரசிகர் மன்றங்களாகவும், கட்சி அலுவலகங்களை ஆட்சி இடங்களாகவும், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தையே கமிஷன் வாங்கும் பணச் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை, ஆஸ்கர் நாயகர்களின் அமைச்சரவைக் காலங்களில்தான் நடந்தது. தவெக அரசு அமைந்ததும், பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் அறவே கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தவெகவினராக இருந்தாலும், பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது! கட்சி நிகழ்வை பள்ளியில் ஒளிபரப்பிய விவகாரத்தில்கூட, அதிரடியாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது வெற்றித் தலைவர் அவர்களின் நேர்மையான அரசு! மனசாட்சி உள்ள மக்களாட்சி! என்றும் மக்களுக்கான ஆட்சி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks