கல்விக்கடன் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு: பெற்றோரின் சிபில் ஸ்கோர் காரணம்?

கல்விக்கடன் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு: பெற்றோரின் சிபில் ஸ்கோர் காரணம்?
News Image

சென்னை: பெற்றோர்களின் சிபில் ஸ்கோரை காரணம் காட்டி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்கின்றன என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் கல்விக்கடன் திட்டம், சமீபகாலமாக பலருக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. பெற்றோரின் சிபில் (CIBIL) ஸ்கோர் அல்லது கடன் திருப்பிச் செலுத்தும் தகுதி குறைவாக இருப்பதை காரணம் காட்டி வங்கிகள் கல்விக்கடன் வழங்க மறுப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதாரக் குறைபாடால் உயர்கல்வியை இழக்கக் கூடாது என்பதற்காக கல்விக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விப் படிப்புகளை தொடர வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஆனால், அண்மைக் காலமாக பல வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, மாணவரின் பெற்றோரின் கிரெடிட் ஸ்கோர் (CIBIL Score) மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றை முக்கிய காரணமாகக் கொண்டு விண்ணப்பங்களை நிராகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கல்வியில் சிறந்து விளங்கும் ஏராளமான மாணவர்கள் கூட கடன் கிடைக்காமல் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கல்விக்கடனில் மாணவரே முதன்மை கடன் பெறுபவராகக் கருதப்பட வேண்டும் என்றும், இது எதிர்கால வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கடன் என்பதால் மாணவரின் கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளே முக்கியமாக பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடைமுறையில், இந்த வழிகாட்டுதல்களை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெற்றோரின் கடன் வரலாறு மோசமாக இருந்தாலோ அல்லது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ கல்விக்கடன் மறுக்கப்படுவது வழக்கமாகி விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த ஜூலை 20-ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றம், பெற்றோரின் கடன் தகுதி குறைவாக இருந்தால் வங்கிகள் கல்விக்கடனை மறுப்பதில் தவறு இல்லை என்ற வகையில் வழங்கிய தீர்ப்பையும் சில வங்கிகள் மேற்கோள் காட்டி கடன் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்விக்கடன் திட்டத்தின் அடிப்படை நோக்கமே ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்வதாக இருந்த நிலையில், தற்போதைய நடைமுறைகள் அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் இருப்பதாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெற்றோரின் பொருளாதார நிலை காரணமாக மாணவர்களின் கல்விக் கனவு பாதிக்கப்படக் கூடாது என்பதால், கல்விக்கடன் வழங்கும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மனிதநேய அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் வலுத்து வருகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வலுவானதாக மாற்றிக் கொள்ள கல்விதான் அஸ்திவாரமாக உள்ளது. அந்த கல்விக்கனவை கலைப்பது போன்று மாறிவிடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதுதான் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks