சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடன் தமிழ்நாட்டின் அவரும் மற்றும் அமைச்சர்களும் பள்ளி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சில அமைச்சர் கள் செய்யும் ஆய்வுகள் சர்ச்சையாகி விடுகின்றன. சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் நடத்திய ஆய்வே அதற்கு உதாரணம். அந்தந்த துறை சார்ந்ந்த அமைச்சர்கள் மற்ற துறைகளை ஆய்வு நடத்துவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனால், தவெக அரசுக்கு நெருக்கடி ஏற்படுகின்றன.

ஆனால், முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ஆய்வுகள் தேவையானவையாக இருக்கின்றன. இரண்டு தினங்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அந்த நீரை குடித்து, திட்டம் விரிவாக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில்,
மகப்பேறு சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு தர்மான மற்றும் விரைவான மருத்துவ சேவையை வழங்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், அங்குள்ள தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், பிறந்த குழந்தைகளை கையில் எடுத்து கொஞ்சினார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Source: Read Full Article