Free Money புத்தக வெளியீடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பொருளாதார நிபுணரும் , காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ஆனந்த் சீனிவாசன் எழுதிய Free money என்ற புத்தகத்தை மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி வெளியிட்டார்.

அதன் பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

அரசியலயைும் பொருளாதாரத்தையும் வெவ்வேறாக பார்க்க கூடாது. இளைஞர்களின் சாதனை என்ன தெரியுமா, ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்தால் அதனை எடுத்து வர முடியும் என செய்து காட்டி உள்ளனர். டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் அந்த மாற்றம் நடந்துள்ளது.

இளைஞர்கள் தான் ஓட்டு போடுவதில் தவறு செய்தார்களா அவர்கள் எடுத்து வந்த ஆட்சி தவறாக போகலாம் அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறுவது தவறு. கடந்த காலங்களில் பெரியவர்கள் கொண்டு வந்த ஆட்சிகளிலும் தவறு நடந்துள்ளது.

பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியல்

தர்மேந்திர பிரதான் ராஜினிமா என்பது மட்டும் தீர்வு கிடையாது பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார்கள் அதற்கு தான் ராஜினாமா செய்து உள்ளார்கள். இன்னும் வினாத்தாள் லீக் பிரச்சனை உள்ளது. எதிர் காலத்தில் நீட் தேர்வு தேவையா இல்லையா என இளைஞர்கள் கேட்பார்கள்.

நாங்கள் நீட் தேர்வே கூடாது என்கிறோம். ஆனால் இவர்கள் தண்டனையை அதிகப்படுத்துவோம் என கூறுகிறார்கள். நமது இந்தியாவில் கல்வி பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூறி உள்ளோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருவதில்லை. மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க விட மாட்டோம் என தமிழக காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தேசிய கட்சி தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த பிரச்சனை இரண்டு மாநிலங்களின் பிரச்சனை இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடக செல்கிறாரா என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது குறித்தான உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் பாராளுமன்றத்தில் என்ன நடக்க போகிறது என பாருங்கள் அதை பற்றி நான் ரொம்ப பேச விரும்பவில்லை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் கர்நாடகம் செல்லக் கூடாது எனவும் அது விஷப் பரீட்சை எனவும் தெரிவித்துள்ளது குறித்தான கேள்விக்கு ;

எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறார். இப்போது ஒரு தேசிய கட்சி தமிழகத்தில் கூட்டணியில் இருக்கிறது. எனவே ஏன் பேசக் கூடாது தமிழ்நாட்டின் பலனுக்காக நாங்கள் பேசுகிறோம். ஒரு தீர்வு வேண்டும் எனவே அது குறித்து பேச்சு வார்த்தை நடந்துகிறோம். இது முதல் முறை கிடையாது முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா , கருணாநிதி உள்ளிட்டோர்களும் கர்நாடக முதல்வரை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

இந்த முறை என்ன வித்தியாசம் என்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது பேச்சுவார்த்தை மூலமாக தமிழ்நாடு நலனுக்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

Source: Read Full Article