புதிதாக தமிழ் தேசியம் பேசும் கும்பல் நான் தெலுங்கர் என அவதூறு பரப்பி வருவதாக நாம் தமிழர் கட்சியை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக சாடியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, “ஆரம்ப காலங்களில் விடுதலை சிறுத்தைகள் மீது பெரிதாக ஊடக வெளிச்சம் என்பது இல்லை. எதிலும் கட்சி பற்றி செய்தி வராது. எப்போதாவது வந்தால் அதனை சேகரித்து வைத்துக்கொண்ட காலமாக இருந்தது. ஆனால் இன்று விசிக பற்றி பேசாத விவாத ஊடகங்கள் இல்லை. அந்த நிலை உருவாகியுள்ளது. இந்த அங்கீகாரம் சாதாரணமாக வந்து விடவில்லை. இடைவிடாமல் நாம் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றியாகும்.

என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் எவ்வளவோ, விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. சில அற்பர்கள் நான் தமிழனே இல்லை என பிரச்சாரம் செய்கிறார்கள். என்னுடைய பெயர் என் பெயரை திருமாவளவன் இல்லை, திம்மவாலன்னு போடுகிறார்கள். அரசியல் அறியாமலையில் அந்த அற்பர்கள் கூறுகிறார்கள். நாம் எப்படியெல்லாம் குறி வைக்கப்படுகிறோம். அரசியல் வெறிகொண்ட சாதி வெறியர்கள் திருமாவளவனின் பறையர் சமூகமே இல்லை என சொன்னார்கள். என் பெயரில் இன்னொருவர் இருந்தார். அவரின் சாதியை என் சாதி என ஒருவன் மாற்றி பேசுறான். உடனே பாமகவினர் அதனைச் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினர்.

நாங்கள் ஆண்ட சாதியினர் என பெருமை கொள்பவர்கள் இல்லை. ஞான வம்சத்தை சார்ந்தவர்கள். கௌதம புத்தரின் கருத்தியல் வாரிசுகளாக களத்தில் நிற்பவர்கள். என் சாதியை மாற்றி பேசுவாதால், நான் சாதி சான்றிதழையா சமூக வலைத்தளத்தில் பதிவிட முடியும். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை, அதுதான் விசிகவின் அரசியலாகும். சாதியால் பெருமை இல்லை என்றால் சாதியால் இழிவும் இல்லை.

Also Read: RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

இப்போது புதிதாக தமிழ் தேசியம் பேசும் கும்பல் ஒருபடி மேலே போய் திருமாவளவன் ஒரு தெலுங்கன் என சொல்கிறார்கள். தெலுங்கர் என்றாலும் அவர்களும் மனிதர்கள் தானே?.. என் பெயர், அப்பா மற்றும் அம்மா பெயரை மாற்றி, இவர்களும் என் சாதியை மாற்றி சொல்கிறார்கள். இன்னும் என்னென்ன பெயர் கண்டறியப்போகிறார்கள் என தெரியவில்லை. இது எதுவுமே என்னைப் பாதிக்காது. ஏனென்றால் நான் கருத்தியல் களத்தில் நிற்பவன். சாதி புத்தி, மதவெறி ஒருபோதும் என்னை அசைக்காது. நாம் தமிழ் தேசியம் பேசுவதை ஒரு கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதித்தமிழர்களாகிய நாங்கள் தான் பேசுவோம். என்னதான் கருத்தியலில் உறுதியாக இருந்தாலும், தொலை நோக்கு பார்வை இருந்தாலும் என்னை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article