யார் பெரிய ரவுடி ? வீடியோவால் வந்த வினை !! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் கொடூரக் கொலை

யார் பெரிய ரவுடி ? வீடியோவால் வந்த வினை !! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் கொடூரக் கொலை
News Image

" வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் "

சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம்., நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்ற அஜய் ( வயது 20 ) இவர் மீது, கொலை முயற்சி உட்பட மூன்று வழக்குகள் உள்ளன. இவர், தன் தோழியான காஜல் என்ற திருநங்கையை , ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் அழைத்து சென்று பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் உள்ள வாரிய குடியிருப்பில் இறக்கி விட்டுள்ளார்

அப்போது , அஜயை பின் தொடர்ந்து, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர், அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியமாக வெட்டி தப்பினர். தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜய் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையை துவக்கிய போலீசார்

தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் , அவரது உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். இக்கொலையில் சம்பந்தப்பட்ட அருண்ராஜ் ( வயது 27 ) உட்பட ஆறு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை, கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ;

கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அஜய்க்கும் , அங்கு ஏற்கனவே இருந்த அருண்ராஜ் ( வயது  27 ) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெளியே வந்த நிலையில், 'யார் பெரிய ரவுடி' என, 'வீடியோ' எடுத்து போடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அருண்ராஜின் உறவுக்கார பெண்ணுக்கு அஜய் குறுந் தகவல் அனுப்பி வந்துள்ளார். இது குறித்து மூன்று நாட்களுக்கு முன், அஜய் வீட்டிற்கு சென்று அருண்ராஜ் கேட்ட போது , இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து அருண்ராஜ், அவரது கூட்டாளிகளான 'ஸ்பேரோ' என்ற தனுஷ் ( வயது 22 ) தமிழரசன் ( வயது 29 ) சுனில் என்ற சூர்யா ( வயது 20 ) சிவா ( வயது 23 )  மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர், அஜயை வெட்டி கொன்றுள்ளனர் என இவ்வாறு கூறினர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks