கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
News Image

மலைக் கோயில் அருகே வெட்டி கொலை

தமிழ்நாடு மாநிலம் , கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி தாலுகா , தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 35 ) இவரது மனைவி ஹாசினி ( வயது 30 ) இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனபள்ளியை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளார்.

ரமேஷ் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 13 - ம் தேதி ஹாசினி தனது கணவர் ரமேஷ் , குழந்தை மவுனிகாவுடன் தாய் வீட்டுக்கு வந்தார். 14 - ம் தேதி மதியம் மல்லப்பா மலையில் உள்ள கோயிலுக்கு ரமேஷ் உள்பட 3 பேரும் பைக்கில் சென்றனர். ஆனால் அன்று நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா ரல்லபுதுகுரு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மலை கோயில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வெட்டி படுகொலை

ஹாசினியும் போயன பள்ளியை சேர்ந்த யுகேந்தரும் சிறு வயது முதலே பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. ரமேசுடன் திருமணம் ஆனாலும் ஹாசினி கள்ளத் தனமாக யுகேந்தருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த ரமேஷ் , அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

எனவே அவரை தீர்த்துக் கட்ட ஹாசினி திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று கணவரிடம் மலைக் கோயிலுக்கு போகலாம் எனக் கூறி குழந்தையுடன் சென்றுள்ளார். இத்தகவலை முன் கூட்டியே தனது காதலன் யுகேந்தருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர், மல்லப்பா மலையில் ஏறும் போது ​​ஹாசினி திட்டமிட்டபடி மூன்றாவது வளைவில் தனது கைப்பையை கீழே தவற விட்டது போல் நடித்தார். இதையறியாத ரமேஷ் , பைக்கை நிறுத்தி விட்டு கைப்பையை எடுக்க சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் 3 பேர் ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசியுள்ளனர்.

பின்னர், ரமேஷின் பைக்கில் யுகேந்தர், தனது காதலி ஹாசினி, மவுனிகாவை அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு, யுகேந்தர் உள்பட 3 பேர் ரயிலில் சென்று விட்டனர் என தெரிய வந்தது.இதையடுத்து யுகேந்தர், ஹாசினி, மவுனிகா மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks