பொலிவிழந்த சிவகங்கை பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள்... வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு!

பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களும் பொலிவிழந்து காணப்பட்டன

சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களும் பொலிவிழந்து காணப்பட்டன. இந்நிலையில், நகரை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. பல நகரங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிவறை பகுதிகளில் இதுபோன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ள நிலையில், அதேபோல் சிவகங்கையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வண்ண ஓவியங்களால் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளது

இதற்காக, ஓவியர் ஒருவர் தனது குழுவினருடன் இணைந்து சுவர்களில் வீரமங்கை வேலுநாச்சியார், ஜல்லிக்கட்டு, தண்ணீர் சேமிப்பு, விவசாயம், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றார். இந்த வண்ண ஓவியங்களால் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள் புதுப்பொலிவு பெற்று, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஓவியங்களை ரசிக்கும் மக்கள் அவற்றின் முன்பு புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்

Source: Read Full Article