விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளப் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் பருவமழை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளப் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் பருவமழை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளப் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் பருவமழை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நீர்நிலைகளைத் தயார் செய்தல்:

இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிநிலைகள் தூர்வாரும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளின் செயல்பாடு, குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (கிராமின்) திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படும் நீர்ப்பாதுகாப்பு பணிகள், பருவமழை பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்ததுடன், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் நிர்வளப் பாதுகாப்பை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை, ஊரகவளரச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் தூர்வாருதல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், ஏரி வாய்க்கால்களை சரிசெய்து பராமரித்தல் போன்ற பணிகளை பருவ மழைக்கு முன்பாகவே முடித்து மழைநீர் சேமிக்கும் வகையில் நிர்நிலைகளை தயார்நிலையில் வைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:

எனவே, எதிர்வரும் பருவமழையினால் கிடைக்கப்பெறும் மழைநீரினை நீர்நிலைகளில் சேமிக்கும் வகையில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) திரு.நந்தகோபால கிருஷ்ணன், திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) திருமதி.ஷபானா, நீர்வளத்துறை செயற்பொறியளார் திரு.அருணகிரி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Source: Read Full Article