சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!

சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!
News Image

இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஆடி வருகிறது. ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியாவில் ஏராளமான டி20 வீரர்கள் உருவாகியுள்ளனர். இதனால், இந்திய டி20 அணியில் இடம் கிடைப்பது என்பது மிக மிக சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

சொதப்பும் சாம்சன்:

இந்த சூழலில், இந்திய அணி தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் தற்பாேது ஆடி வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியுடன் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே ஆகியோரின் அதிரடியால் இந்த ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய போ்டடியிலும் 1 ரன் எடுத்து அவுட்டானார். அவர் அயர்லாந்து தொடரிலும் இரண்டு டி20 போட்டியிலும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார். அதில் ஒரு போட்டியில் டக் அவுட்டானார். இந்திய அணியில் முறையாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சாம்சனுக்கு ஆதரவாக குரல் எழுந்து வந்த நிலையில், அவருக்கு டி20 உலகக்கோப்பைக்கு முன்பு முதல் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தயார் நிலையில் சூர்யவன்ஷி:

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு சாம்சனின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து, அவர் கடைசியாக வெளிநாட்டு மண்ணில் ஆடிய 3 போட்டியிலும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார். இந்திய அணியில் தொடக்க வீரராக ஆடுவதற்கு பலரும் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக, 15 வயதிலே இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சூர்யவன்ஷியை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதனால், சூர்யவன்ஷியை இந்திய அணியின் புதிய முகமாக காட்டுவதற்கும் பிசிசிஐ முயற்சித்து வருகிறது. இந்த சூழலில், தனது தொடக்க வீரர் வாய்ப்பை தொடர்ந்து தக்க வைப்பதற்கு சாம்சன் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

கடும் போட்டி:

சாம்சன் இந்திய அணிக்காக கடைசியாக ஆடிய 10 டி20 இன்னிங்ஸ்களில் 0 (1), 24 (15), 6 (6), 22(8), 24 ( 15), 97 (50), 89 (42),  89 (46), 5 (4), 0 (1) மற்றும் 1 (7) ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடிய சாம்சன் 477 ரன்கள் குவித்தார். அதில் 2 சதங்கள் அடங்கும். இந்திய டி20 அணியில் தொடக்க வீரர் வாய்ப்பிற்காக சூர்யவன்ஷி மிகவும் தயாராக உள்ளார். அவர் மட்டுமின்றி பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், இஷான் கிஷன், படிக்கல், வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் என பெரிய பட்டாளமே உள்ளனர்.

இந்த சூழலில், சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது அவரது எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்காது. மேலும், இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள எஞ்சிய 4 டி20 போட்டிகளிலும் சாம்சன் சிறப்பாக ஆடினால் மட்டுமே அவரது இடம் அணியில் உறுதியாக இருக்கும். இல்லாவிட்டால் அவரது இடம் மீண்டும் கேள்விக்குறியாவது உறுதி. இதனால், இனி வரும் போட்டிகளில் சாம்சன் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

sa

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks