Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை

Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
News Image

நீட் தேர்வு மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் தற்போது அரசியல் கட்சிகளும் இணைந்துள்ள நிலையில், டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும், மாணவர்களை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியும், வீ தி லீடர்ஸின் தலைவர் அண்ணாமலை பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அண்ணாமலையின் பதிவு

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “கடந்த பல ஆண்டுகளாக, நான் நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். அது நாடு முழுவதும் மாணவர் தேர்வில் ஒரு சீரான தன்மையை கொண்டுவந்தது என்றும், நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் தங்கள் கனவைத் தொடர ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது என்றும் நான் வாதிட்டு வருகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை கொண்டுவர வேண்டிய அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, ​​மீண்டும் ஒருமுறை தேர்வு செயல்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்த மாணவர்கள் மீது அது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனாலும், எந்தப் பொறுப்புக்கூறலும் இருக்கவில்லை. அந்தத் தருணம்தான், மாணவர்கள் தங்கள் மனமுருகக் கதறி அழுவதற்காக வீதிகளில் இறங்குவதற்கு அவர்களின் மனங்களில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.“ என கூறியுள்ளார்.

பாஜக அரசுக்கு கேள்வி

மேலும், “ஒரு ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இருப்பினும், பொருத்தமான கேள்வி இதுதான்: பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் ஒரு பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது.? போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடையும் வரை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது.? உங்களை காத்திருக்க வைத்தது எது.?“ என்று அண்ணாமலை கேள்வி எழுப்புயுள்ளார்.

மாணவர்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து, “மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் மக்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. ஒரு போராட்டம் வாரக் கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநலவாதிகள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்ப கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்துக்களை பரப்புவதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காக போராட்டத்தை முழுமையாக திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பானதுதான். நீங்கள் மௌனமாக இருந்து, இந்த சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் அடிப்படை குறிக்கோள்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தயவுசெய்து அதை நடக்க விடாதீர்கள்!“ என்று மாணவர்களுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

அதோடு, “பாஜக தலைமையிலான மத்திய அரசு, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவும், தற்போதைய பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, விரைவான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு தேசத்தின் வலிமையும், அதன் இளைஞர்கள், அதன் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்தால், நாம் நமது தேசத்தின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.“ என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In…
— K.Annamalai (@annamalai_k) July 22, 2026

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks