Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
News Image

Ajinkya Rahane: மும்பையை சேர்ந்த 36 வயதான அஜிங்க்யா ரகானே, இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

ஓய்வை அறிவித்த அஜிங்க்யா ரகானே..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரகானே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், தனக்கு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 36 வயதான இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட 5 ஆயிரத்து 77 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட 2 ஆயிரத்து 962 ரன்கள் விளாசியுள்ளார். அதேநேரம், ரகானே என்றாலே 2021ம் ஆண்டு அவரது தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி 2-1 என பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது தான் ரசிகர்களின் நினைவிற்கு வரும்.

36 ரன்களுக்கு ஆல்-அவுட் - கேப்டன் செஞ்சுரி

ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணம் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அடிலெய்டில் இந்தியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதனிடையே தனது தந்தை உயிரிழந்த்தால் விராட் கோலி அவசரமாக நாடு திரும்பினார். முழு பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சுத் தாக்குதலுடன் இருந்த ஆஸ்திரேலியா, தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் காணப்பட்டது. அந்த நேரத்தில், இந்தியாவுக்கு மிகவும் தேவைப்பட்ட நிதானமான கேப்டனாக ரகானே செயல்பட தொடங்கினார்.  ஆக்ரோஷமான வழிகாட்டுதல்கள் மூலம் உத்வேகம் அளிக்க முயலும் கேப்டன்களைப் போலல்லாமல், ரகானே அமைதியான உறுதியுடன் வழிநடத்தினார். பாக்சிங் டே டெஸ்டில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவர் ஆட்டமிழக்காமல் அடித்த 112 ரன்கள், அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆட்டக்காரர்கள் அறைக்கு நம்பிக்கையை மீட்டெடுத்ததுடன், தொடரையும் சமன் செய்தது.

காயங்களால் கவலையில் இந்தியா

இதனிடியே காயங்கள் அதிகரித்ததாலும், ஆட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி போன்ற இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறினர். ஆனாலும், ரகானே தற்காப்பு ஆட்டத்திற்குப் பின்வாங்கும் எண்ணத்தைத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக, முகமது சிராஜ், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அடங்கிய அனுபவமற்ற குழுவை நம்பி களமிறங்கினார். அந்த நம்பிக்கை, டெஸ்ட் கிரிக்கெட்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்ய உதவியது.

இதையும் படியுங்கள்: Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?

இந்தியாவி வரலாற்று வெற்றி

கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்து, அங்கு 32 ஆண்டுகளாக தோல்வியே கண்டிராத ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி கூட இல்லாமல், நான்கு வெற்றிகள் மற்றும் இரண்டு சமன்களுடன் அவர் பெற்றுள்ள கேப்டன்சி சாதனை, அவரது அமைதியான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. ஆனால், வெறும் புள்ளிவிவரங்களால் மட்டும் அவரது தாக்கத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த வெற்றியை நினைக்கும்போதெல்லாம், இந்திய ரசிகர்களிடையே ரகானேவின் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks