அறநிலையத்துறை அதிரடி

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசில் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரமேஷ், இவர் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பணம் வசூலித்த குருக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அடுத்தாக வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவிப்பு மற்றும் நிர்வாக ஒழுங்கின்மை குறித்த புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

தரிசனச்சீட்டு, விலைபட்டியல்- அமைச்சர் ரமேஷ்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்சம், சட்டவிரோத பணவசூல் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் நேரடியாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அறிவித்துள்ளார். அடுத்தாக முக்கிய கோவில்களில் ஆன்லைன் தரிசனச் சீட்டு முறை, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், விலைப்பட்டியல் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட நிர்வாக மேம்பாடுகளை அதிகாரிகளுக்கும் அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தான், கோவை பெரியகடை வீதி அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் கடந்த 15.07.2026 அன்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டு திருடிய 4 ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் இருந்த 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி ஆணையர் ஆகியோரை கூண்டுடோடு பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு! மேலும் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதியப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு உள்ளது.

8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் அதிரடி

திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரம்:
1. பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்)
2. சரவணன் (அலுவலக உதவியாளர்)
3. பிரதிப்குமார் (திருவலகு)
4. கிருஷ்ணராஜ் (பூசாரி)

அதிகாரிகள்:
1. ராம்குமார் (சரக ஆய்வாளர்)
2. உதயகுமார் (சரக ஆய்வாளர்)
3. குமார் (செயல் அலுவலர்)
4. உஷா நந்தினி (உதவி ஆணையர்)

Source: Read Full Article