தவெக அரசின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தேர்தலை வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது 500 யூனிட்டிற்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து மகளிர் மற்றும் பெண் குழுந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையையும் அறிவித்த முதலமைச்சர் விஜய், இந்த திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.அடுத்ததாக அரஞு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் பரிசாக ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் ஆலோசனை

அந்த வகையில் பல்வேறு திட்டங்களை தவெக அரசு அறிவித்து வரும் நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.எனவே இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாயாக உயர்வு, தாய் மாமன் சீர், வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை போன்ற முக்கிய அறிவிப்பு வெளியாகுமா.? எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்ந வகையில் பட்ஜெட்டை தொடர்ந்து மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து ஒவ்வொரு துறை வாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.அந்த வகையில், சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை என பல துறைகள் மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும், கிடப்பில் உள்ள திட்டங்கள், நிதி இருப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்

அந்த வகையில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில்இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.

யாருக்கெல்லாம் கடன் உதவி.?

இதற்காக, இந்தாண்டில் சுய உதவி குழுக்களுக்கு, 7,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article