உடலுறவுக்கு அனுமதிக்காத மனைவி

தென்காசி மாவட்டம் தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் சக்தி வீர மணிகண்டன் ( வயது 32 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி ( வயதே 24 ) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்த நிலையில் திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, உடலுறவு கொள்வதில் அன்னலெட்சுமிக்கு சிறிதும் விருப்பம் இல்லாத நிலையில் , அவரை சக்தி வீரமணிகண்டன் , தன்னுடன் உடலுறவு வைத்து கொள்ள சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் , இருவருக்கும் இடையே இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவிக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு

இந்த நிலையில் 26 - ம் தேதி அன்று இரவு நேரத்தில் ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அன்னலெட்சுமி தவறான ஒரு வார்த்தையை கூறி சக்தி வீரமணிகண்டனை திட்டியுள்ளார். இதனால், ஆவேசமடைந்த சக்தி வீரமணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியின் கழுத்து , மார்பு உள்ளிட்ட 6 இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அன்னலட்சுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வீர மணிகண்டன் கதவை பூட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று எதுவும் நடக்காதது போல் உறங்கியுள்ளார்.

இந்த நிலையில், தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சக்தி வீரமணிகண்டன் தானாக முன்வந்து ஆஜராகி, தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் , அதனால் சரணடைய வந்திருப்பதாகவும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடையடைந்து உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் இது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தென்காசி போலீசார் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த அன்னலட்சுமியை அவர்கள் மீட்டு பிரேத சோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் , இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி சக்தி வீரமணிகண்டனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article