​60 வயதுக்கு உட்பட்டவரா நீங்கள்? தமிழக அரசின் இந்த இலவச திட்டம் பற்றி தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!

​60 வயதுக்கு உட்பட்டவரா நீங்கள்? தமிழக அரசின் இந்த இலவச திட்டம் பற்றி தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!
News Image

தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மொத்தம் 20 தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தகுதியுடைய தொழிலாளர்கள் தாங்கள் செய்யும் தொழிலின் தன்மைக்கு ஏற்ப, அதற்குரிய வாரியங்களில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

பதிவு மற்றும் புதுப்பித்தல் முறை

அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnuwwb.tn.gov.in வாயிலாக தங்களது பெயர்களை எளிதாகப் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்த உறுப்பினர்கள் தங்களுக்கு 60 வயது பூர்த்தியாகும் வரையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவினை இதே இணையதளத்தின் மூலம் தவறாமல் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த வாரியங்களில் புதியதாகப் பதிவு செய்வதற்கோ, பதிவைப் புதுப்பிப்பதற்கோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கோ எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை; இவை முற்றிலும் இலவசமாகச் செய்து தரப்படுகிறது.

வழங்கப்படும் நிதியுதவிகள் மற்றும் கோரிக்கை மனுக்கள்

வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி நிதியுதவி, திருமண உதவித்தொகை, மகப்பேறு கால நிதியுதவி, ஓய்வூதியம், இயற்கை மரணத்திற்கான ஈட்டுத்தொகை மற்றும் விபத்து மரண காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து, இதுநாள் வரையில் எவ்வித நிதியுதவியும் பெறாத தொழிலாளர்கள், தங்களுக்குரிய நிதியுதவிக் கோரும் கேட்பு மனுக்களை இணையதளம் வாயிலாகவே சமர்ப்பித்து பயன் பெறலாம். மேலும், 60 வயது பூர்த்தியாகாத நிலையில் இதுவரை தங்களது வாரியப் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களும், உடனடியாக இணைய வழியில் புதுப்பித்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இது குறித்து கூடுதல் விவரங்கள் தேவைப்படும் தொழிலாளர்கள் அல்லது சந்தேகங்கள் உள்ளவர்கள் காஞ்சிபுரம், ஓரிக்கை, அண்ணா நெசவாளர் குடியிருப்பில் அமைந்துள்ளதொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 044-29593177 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks