திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
News Image

" தலையில் பலத்த காயத்துடன் மயக்கம் "

தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி ( வயது 56 ) இவரது கணவர் காளிமுத்து திருமணமான ஓராண்டிலேயே பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மகள் சத்யாவை தனியாக வளர்த்த முத்துலட்சுமி , பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

மகளுக்கு திருமணம் ஆன பிறகு , இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் , கடந்த ( ஜூலை 15 ) - ம் தேதி சத்யா வெளியூருக்கு சென்றிருந்ததால் , முத்து லட்சுமி வீட்டின் முன்புற திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். மறு நாள் அதிகாலை அப்பகுதி மக்கள் வெளியே வந்த போது , அவரது உடையில் அணிந்திருந்த சேலை கலைந்த நிலையிலும் , தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடலை வாங்க மறுப்பு

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து திரும்பிய மகள் சத்யா , தனது தாய் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் , காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி கடந்த ஜூலை 18 - ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முத்து லட்சுமியின் மகள் சத்யா மற்றும் உறவினர்கள் , தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சாதாரண மரணம் அல்ல , திட்டமிட்ட கொலை என்றும், தலையில் இருந்த பலத்த காயங்களை கருத்தில் கொண்டு வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் , பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்துலட்சுமியின் மண்டையில் மூன்று ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தது உறுதியானது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் , போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு , உதவி ஆய்வாளர்கள் முகிலரசன் மற்றும் சுப்புராஜ் தலைமையில் மூன்று தனிப் படைகளை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

பாலியல் வன்கொடுமை

சம்பவம் நடைபெற்ற பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரீகன் ( வயது 37 ) என்பவரை அடையாளம் கண்டனர். அவர் மீது ஏற்கனவே பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் , சம்பவத்தன்று ரீகன் மது போதையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார். நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் , பெண்களை பின் தொடர்ந்து பாலியல் நோக்கத்துடன் அலைந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் வீட்டின் வாசலில் தனியாக படுத்திருந்த முத்துலட்சுமியை பார்த்த ரீகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , பின்னர் சம்பவத்தை வெளியில் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் அவரது தலையில் கொடூரமாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks