3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
News Image

பல பெண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்த ஆட்டோ டிரைவர்

சென்னை செங்குன்றம் அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் ( வயது 43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கவுசல்யா ( வயது 40 ) மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2013 - ம் ஆண்டு முதல் மனைவி கவுசல்யாவுக்குத் தெரியாமல் ஏராளமான பெண்களுடன் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2017 - ல் மற்றொரு பெண்ணை சாந்தகுமார் 2 - வது திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கும் தற்போது 2 மகன்கள் உள்ளனர். பின்னர் 2 - வது மனைவி சாந்தகுமாரை பிரிந்து சென்ற நிலையில், கடந்த 2022 - ம் ஆண்டு முதல் மனைவியான கவுசல்யாவிடம் மன்னிப்பு கேட்டு, திருந்தி வாழ்வதாக சாந்தகுமார் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

போலி சாமியாராக மாறிய ஆட்டோ டிரைவர்

பின்னர் குடும்பத்துடன் பொத்தூர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு கருப்பசாமி கோயில் கட்டி, போலி சாமியாராக குறி சொல்லி வந்துள்ளார். கோயிலுக்கு வரும் இளம்பெண்களிடம் பழகி ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி கவுசல்யாவுக்கும் போலி சாமியார் சாந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தன்னிடம் குறி கேட்க வந்த விமான பொறியியல் படித்த 22 வயதான இளம்பெண்ணை போலி சாமியார் சாந்தகுமார் 3 - வது திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்தது. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, அவரை ஏமாற்றி மேலும் 2 பெண்களை போலி சாமியார் சாந்தகுமார் திருமணம் செய்துள்ளதாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி கவுசல்யா புகார் அளித்தார்.

3 குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இப்புகாரின் பேரில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் 2 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுதல் உள்பட 3 குற்றப் பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர், மனைவியை ஏமாற்றி 2 பெண்களைத் திருமணம் செய்த போலி சாமியார் சாந்தகுமாரை மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks