பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. தள்ளுவண்டி கடை மற்றும் சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் சிலிண்டர்கள் கனமாக இருப்பதால் கையாளுவதற்கு ஏற்றவாறு இல்லை. எனவே அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கும், வணிகப் பயன்பாட்டிற்கும் 10 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

கடை நடத்துபவர்கள் சிரமப்பட்டு இந்த 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை பயன்படுத்தும் போது நீண்ட நாட்களுக்கு கேஸ் பிரச்சனை இருக்காது என்றாலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு சற்று சிரமமாகவே இருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 10 கிலோ கொண்ட காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பணிக்காக அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்களுக்கு இந்த சிலிண்டர்கள் மிகவும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக எல்பிஜி சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சூழலில் 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

அடையாள ஆவணங்களை வழங்கி அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மூலமாகவே இந்த குட்டி சிலிண்டர்களை பெற முடியும். ஆனால் நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எண்ணெய் நிறுவனங்கள் தற்போது 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறது.ஹை டென்சிட்டி பாலிஎதிலீன் காம்போசிட் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 10 கிலோ சிலிண்டர்கள் தயாராக இருக்கிறது. இந்த சிலிண்டர்கள் வழக்கமாக நாம் பயன்படுத்தும் சிலிண்டரின் எடையைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவான எடையைக் கொண்டிருக்கும். எனவே கையாளுவதற்கும் எளிதாக இருக்கும்.

லைட் வெயிட்டாக இருப்பதால் குறுகிய படிக்கட்டிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். அதேபோல சிலிண்டரின் வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு எரிவாயு இருக்கிறது என்பதை நுகர்வோரால் பார்க்க முடியும். இதனால் சரியான நேரத்தில் ரீபில் செய்து கொள்ள முடியும். ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் போது திடீரென சிலிண்டர் தீர்ந்து போகும் பிரச்சனையும் குறையும். பத்து கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலை என்ன? எப்போது முதல் நுகர்வோருக்கு கிடைக்கும் என்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

Source: Read Full Article