திடீரென நுரையீரல் தொற்று பாதிப்பு

திருவண்ணாமலையை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகுமார் ( வயது 42 ). இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சிந்து ( வயது 38 ) இவர்களுக்கு 10 - ம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் உள்ளான்.

ஆனால் கடந்த மாதங்களுக்கு முன்பு சந்திரகுமாருக்குத் திடீரென நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை மோசமாகி உள்ளது. எனவே வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ரயிலில் பாய்ந்து தற்கொலை

சமீபத்தில் கணவன் , மனைவி இருவரும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. ஒருவேளை சிகிச்சைக்காக தங்கியிருந்து விட்டு வருவார்கள் என்று உறவினர்களும் நினைத்துள்ளனர்.

ஆனால், போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே, நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தம்பதியர் 2 பேருமே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசாரின் இருவரின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின் போது, சந்திரகுமாரின் சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், நீண்ட நாட்களாகத் தன்னை பாதித்திருந்த நுரையீரல் தொற்று குறித்தும், அதன் காரணமாக வேலையின்றி தவித்த வேதனை குறித்தும் சந்திரகுமார் எழுதியிருந்தனர்.

சிக்கிய கடிதம்

எனது நோய் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் அதிகரித்து விட்டது. எதிர்காலத்தில் குடும்பத்திற்கு பெரும் கடன் சுமை ஏற்படும். எங்களது பிள்ளையையும் கடனில் தள்ள விரும்பவில்லை. இந்த நிலை நீடித்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் தான், நாங்களே இப்படியொரு முடிவை எடுத்துக்கொண்டோம் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

10-ம் வகுப்பு படிக்கும் மகனைத் தவிக்க விட்டு விட்டு, தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article