Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்

Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
News Image

சென்னையில், மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தான் முதலமைச்சர் விஜய்யிடம் 50 கோடி ரூபாய் வாங்கிவிட்டதாக வெளியான செய்தி குறித்தும், திமுக-அதிமுக கூட்டணி அமைக்க இருந்தது பற்றியும் கருத்து தெரிவித்ததோடு, இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார். அவரது பேட்டி குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

“திமுக-அதிமுக அரசியல் மோசடி.!“

மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இதுவரை நடைபெற்ற பொதுக்குழுவிலேயே, இந்த பொதுக்குழு சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்ததாக கூறினார்.

பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியான போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது என்றும், அது உண்மையாக இருந்திருந்தால், அரசியல் மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.

“திமுக உடன் தோழமையாக இருக்க முடியாது, இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு“

அதன் காரணமாக, திமுக உடன் இனி தோழமையில் இருப்பது சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு தாங்கள் வந்ததாக கூறிய வைகோ, சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் இணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார்.

“விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கினேனா.? பரப்பியவர்கள் சட்டப்படி நடவடிக்கை“

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யிடம் தான் 50 கோடி ரூபாய் வாங்கிவிட்டதாக அபாண்டமாக பொய் பரப்பப்படுவதாக கூறினார். மேலும், இந்த பொய் குற்றச்சாட்டு மீது வழக்கு தொடர உள்ளதாக கூறிய அவர், கட்சிக்காக சொத்தை விற்றவன் தாம் என்று குறிப்பிட்டார்.

அதோடு, இதற்கு முன்னர் ஜெயலலிதாவிடம் தான் கோடி கோடியாக பணம் வாங்கிவிட்டதாக பொய் பரப்பப்பட்டதாகவும், ஆனால் திமுக மீது தான் விமர்சனங்களை வைத்தது இல்லை என்றும், மாறாக திமுக ஆட்சியை பாராட்டி இருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டினார்.

அதனால், இனி திமுக உடன் தோழமையாக நீடிப்பது சாத்தியமற்ற விஷயம் என்று மதிமுக முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தன்னுடைய நேர்மையும், நாணயமும் தனக்கு தெரியும் என்றும், பொது வாழ்வில் நேர்மையை தான் கடைபிடித்து வருவதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? - வைகோ பதில்

தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யை வைகோ சந்தித்தபோது, மதிமுக எம்எல்ஏ-க்கள் இரண்டு பேரையும் அவர் ராஜினாமா செய்யச் சொன்னாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் அவ்வாறு கூறியதாகவும், இடைத்தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாகவும் கூறியதாக போட்டுடைத்தார்.

மேலும், அது குதிரை பேரம் இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் அவ்வாறு கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், தங்கள் கட்சியின் ஒரு எம்எல்ஏ-வான செந்தில் செல்வனை திமுகவில் இணைத்திருப்பது, குதிரை பேரமா அல்லது ஒட்டக பேரமா என கோபத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும்,  தங்கள் எம்எல்ஏ ராஜினாமா செய்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் வைகோ கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks