Trump Netanyahu: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் நேதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

அதிருப்தியில் அமெரிக்கா:

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான ராணுவ நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதனை காரணம் காட்டி அமெரிக்க உடனான அமைதிப் பேச்சுவார்த்தியை ஈரான் கைவிட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசும்போது, மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி ட்ரம்ப் கடுமையாகச் சாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்கும், தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதற்கும் பிறகு அமெரிக்காவின் இந்த ஆவேசம் வெளிப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒரு பரந்த பிராந்தியப் போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியதுடன், தெஹ்ரானிடமிருந்து புதிய எச்சரிக்கைகளையும் தூண்டியிருந்தன. இதனிடையே, ஈரானுடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை இந்த மோதல் சீர்குலைப்பதைத் தடுக்க தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

”பைத்தியக்காரா, நீ ஜெயில்ல இருந்து இருப்ப”

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, “ இஸ்ரேலை சர்வதேச தனிமைப்படுத்தலை நோக்கித் தள்ளுவதாகவும், ஈரானுடனான அமெரிக்காவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும்” நேதன்யாகு மீது ட்ரம்ப் குற்றம் சாட்டினார். தொலைபேசி உரையாடல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, “நீ ஒரு பைத்தியக்காரன். நான் மட்டும் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய். நான் தான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எல்லோரும் இஸ்ரேலையே வெறுக்கிறார்கள்” என்று ட்ரம்ப் பேசியுள்ளாராம். அந்த அழைப்பின் போது வெளிப்படையாகக் கோபமாக இருந்த டிரம்ப், ஒரு கட்டத்தில், “என்ன எழவுடா செஞ்சிட்டு இருக்க?” என்று கத்தினார் எனவும் கத்தி கூச்சலிட்டுள்ளாராம்.

எல்லையை மீறும் நேதன்யாகு..

ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் முன்வைத்த வாதத்தை புரிந்துகொண்டாலும், இந்த மோதலைத் தேவைக்கு அதிகமாக நேதன்யாகு தீவிரப்படுத்துவதாக ட்ரம்ப் நம்புகிறாராம். இந்த தொலைபேசி உரையாடலை தொடர்ந்து பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட்டதாக கூறப்படுகிறது. படைகளும் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டதாக இடைத்தரகர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு

முடங்கிய பேச்சுவார்த்தை:

ஹிஸ்புல்லா மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறுவதாகவும், இஸ்ரேலியப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டி, பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்த நேதன்யாகு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் உருவெடுத்தது. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். இதனிடையே, ஹிஸ்புல்லாவை ஆதரிக்கும் ஈரான், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பல மாத கால மோதலுக்குப் பிறகு பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் வாஷிங்டனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சீர்குலைந்துவிடும் என்று எச்சரித்தது. அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் லெபனானிலும் போர் நிறுத்தம் வரவேண்டியது மிகவும் முக்கியம் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என ட்ரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில், இஸ்ரேலின் செயல்பாடு அவரை மிகவும் கொதிப்படைய செய்துள்ளது.

Source: Read Full Article