Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
News Image

இந்திய ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறையானது 2026 ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பயணிகள் சிரமம் குறையும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே திகழ்கிறது. மின்சார ரயில் தொடங்கி பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், வந்தே பாரத், ராஜஸ்தானி, தேஜஸ் என பல வகையான ரயில்கள் இயக்கப்படுகிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமல்லாது ஐஆர்சிடிசி, ரயில் ஒன் செயலிகள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதேபோல் ரயில்வே ஏஜெண்ட்கள் வாயிலாகவும் நாம் டிக்கெட்டுகள் பெற முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதால் ரயில்வே அமைச்சகம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது. சமீபகாலமாக தட்கல் மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறுவதில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வே கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் முன்பதிவு முறையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளது. தற்போது டிக்கெட் முன்பதிவில் இருக்கும் விதிமுறைகள் யாவும் 1986ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டவை. இனிமேல் ரயில்களும், அவற்றின் முன்பதிவு முறையும் படிப்படியாக புதிய முறைக்கு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்துவதிலும், அமைப்பில் திறனை அதிகரிப்பதன் மூலமும் பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்துள்ளார். இந்த மாற்றம் முழுவதுமாக அமலுக்கு வரும் காலக்கட்டத்தில் கூட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  புதிய முறையானது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி   கட்டமைக்கப்பட்டுள்ளது. இணையவழி ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்த நடைமுறையை மேம்படுத்துவதும் நோக்கமாக உள்ளது.

Also Read: விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !

இந்திய ரயில்வே 2002ம் ஆண்டு தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு முறையை கொண்டு வந்தது. தற்சமயம் சுமார் 88 சதவிகித டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாகவே செய்யப்படுகிறது. இந்திய ரயில்வேயின்  டிஜிட்டல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக 2025ம் ஆண்டு ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை சுமார் 3.5 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது.  ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காத்திருப்புப் பட்டியல் முன்கணிப்பு முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகுமா என்பது 94 சதவிகிதம் துல்லியமாக புதிய நடைமுறையின் மூலம் அறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks