தமிழகத்தில் தொடரும் குற்ற சம்பவங்கள்

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக திமுக ஆட்சி காலத்தின் போது தவெக தலைவராக இருந்த விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள், ஏராளமான கொலை சம்பவங்களும் அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சட்டப்பேரவை கூட்டம்

இந்த நிலையில் தவெக அரசு பதவியேற்ற நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே எந்தவித காரசார மோதல் இல்லாத நிலையில், நேற்று முதல் ஆளுநர் உரையுடன் கூடிய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. நேரம் இல்லாத நேரத்தில் தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக எதிர்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசுவுள்ளார்.

மேகதாது அணை- முதலமைச்சர் விஜய் தீர்மானம்

இதனையடுத்து காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதனை முறியடிக்கும் வகையில் தவெக அரசு தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் திமுக சார்பாக 2 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஒருவரும்,ஆளுங்கட்சியான தவெக சார்பாக 3 பேரும் உரையாற்றவுள்ளனர்.

<iframe title="🔴 TN Assembly | ஆளுநர் உரை மீதான விவாதம் ரவுண்டு கட்டும் உதய்-இபிஎஸ் சமாளிப்பாரா முதல்வர் விஜய்?" src="https://www.youtube.com/embed/3MDl-ooJ0yA" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

Source: Read Full Article