PT Arasakumar: திமுக நிர்வாகி பி.டி. அரசகுமார் அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிகள் சங்கம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

ரூ.100 கோடி மோசடி - திமுக நிர்வாகி கைது

திமுக நிர்வாகியான பி.டி. அரசகுமார், சென்னை சாலிகிராமத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி பள்ளி அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் சட்டப்பூர்வ அனுமதி ஆகியவற்றை பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும் அரசகுமாரின் பணத்தை வழங்கியுள்ளனர். ஆனால், தங்களுக்கு உரிய அனுமதியை பெற்றுத்தராமல், சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்த மோசடி என்ன?

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர், 59 வயதான பி.டி. அரசகுமார் மீது காவல்துறையில் புகாரளித்தார். அதில், “மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்வு மற்றும் டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) போன்ற அமைப்புகளிடமிருந்து அனுமதி பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டன. இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த பி.டி. அரசகுமார் இந்த அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அணுகி இருக்கிறார். அதன் பின் பல பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட வாக்குறுதி அளித்தபடி அனுமதிகளைப் பெற்றுத் தரவும் இல்லை, பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை. இதன் மூலம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக” குற்றம்சாட்டப்பட்டது.

கைது நடவடிக்கை எங்கே?

தனியார் பள்ளிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையர் பி.சி. தேன்மொழி மேற்பார்வையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் வி.இ. செந்தில் தலைமையிலான சிறப்புப் படையினர், சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் பி.டி.அரசகுமாரை (59) நேற்று கைது செய்தனர். தொடர்ந்து இன்று அவர் மாவட்ட மேஜஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ” TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?

பார்ட்டி ஃபண்ட்..

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க கட்டணத்துடன், கடந்த ஆட்சி காலத்தில் கட்சி நிதியும் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பல பள்ளிகள் கடந்த ஆட்சியில் கட்டாயப்படுத்தி நிதி வசூலிக்கப்பட்டதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில் அனுமதி பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக, திமுக நிர்வாகி ஒருவர் கைதாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article