Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?

Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
News Image

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை சிதைக்கும் வகையில், லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்வதால், ட்ரம்ப்பிற்கு அது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால், ஈரான் உடனான பேச்சுவார்தையும் இழுபறியில் உள்ளது.

ட்ரம்ப் வார்னிங்கையும் மதிக்காத நெதன்யாகு

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்த உடன்படிக்கையில், இஸ்ரேல் - லெபனான் மோதலும் அடங்கியிருந்தது. அதாவது, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதும் அந்த உடன்படிக்கையில் ஒரு அம்சமாக இருந்தது. ஆனால், இஸ்ரேல் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தியதால், அமைதிப் பேச்சுவார்தையில் ஈடுபட முடியாது என ஈரான் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, கடும் சொற்களை பேசி, தாக்குதலை நிறுத்துமாறு கூறினார். அதாவது, நெதன்யாகுவை பைத்தியக்காரன் என்று ட்ரம்ப் திட்டியதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் ட்ரம்ப்பும் அதை உறுதி செய்தார்.

லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

ட்ரம்ப்பின் கடும் சொற்களுக்கும் அடங்காத இஸ்ரேல், லெபனானில் நேற்று இரவு கூட வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

நபதிஹ் மற்றும் மர்ஜாயூன் ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையில் சென்றுகொண்டிருந்த லெபனான் ராணுவத்தின் வாகனம் ஒன்றின் மீது குறிவைத்து, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், லெபனான் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் அவருடன் பயணித்த 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், சக்சாகியா என்ற கிராமத்தின் மீதும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்கதல் நடத்தியதாகவும், அதில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தாக்கப்பட்ட லெபனானின் ராணுவ வாகனம், போர் மண்டலத்துக்குள் இஸ்ரேல் படைகளை நோக்கி சந்தேகத்திற்குரிய வகையில் நகர்ந்து வந்ததாகவும், அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தமும் பதிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலோய அந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் கொடுத்துள்ளது.

அதோடு, ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக மட்டுமே செயல்படுவதாகவும், லெபனான் ராணுவத்திற்கு எதிராக செயல்படவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

என்ன செய்யும் ஈரான்.?

இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப்பும், ஈரானும் மாறி மாறி நிபந்தனைகளை விதித்து வருவதால், பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலும் லெபனானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போர்நிறுத்தம் தொடங்கப்பட்டது முதலே, இஸ்ரேலில் செயலை ஈரான் கண்டித்து வருகிறது. அது போர்நிறுத்தத்தை மீறு செயல் என கூறி, பேச்சுவார்தையை தொடர முடியாது என்று கூறி வருகிறது. இதனால், ஈரான் அடுத்து என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ட்ரம்ப்பும் அவ்வப்போது மிரட்டல்களை விடுத்தாலும், எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தை எட்டிவிட வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக உள்ளது. ஆனால், நடப்பதை பார்த்தால், அவரது ஆசை நிராசையாகிவிடும் போல் தெரிகிறது. இப்போது ட்ரம்ப் என்ன செய்வார் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே நெதன்யாகுவை திட்டிய அவர், இப்போது என்ன செய்யப் போகிறார் என்பதே உலக நாடுகளின் கேள்வியாக மாறியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks