விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?

விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
News Image

தமிழக அரசியலில் புதிய மாற்றம்

சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக அரசியல் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகள் மட்டும் கடந்த 50 ஆண்டுகளிக்கு மேலாக மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தவெக ஒட்டுமொத்தமாக தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிப்போட்டது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க மேலும் 10 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணிக்கு பல்டி அடித்தது. அதிலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.

பல்டி அடித்த திமுக கூட்டணி கட்சிகள்

அதே நேரம் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மதிமுகவால் தவெகவிற்கு ஆதரவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் மதிமுக திமுக கூட்டணியில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதனால் மதிமுக சார்பாக வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏ என்ற கணக்கிலேயே இருப்பார்கள். எனவே தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைந்து அந்த 2 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டிடியிட வைக்கலாம் என் வைகோ திட்டமிட்டார்.

விஜய் சொன்ன யோசனை- ஓகே சொன்ன வைகோ

இதற்கு ஏற்றார் போல முதலமைச்சர் விஜய்யை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து வைகோ ஆலோசனை நடத்தினார். அப்போது மதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களை இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று தருகிறேன் என முதலமைச்சர் விஜய்  உறுதியளித்துள்ளார். மேலும் மதிமுக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியிலும் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து  கடையநல்லூர்  தொகுதி எம்எல்ஏ தி. மு. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி  எம்எல்ஏ எம். செந்தில் செல்வன் ஆகியோரை ராஜினாமா செய்ய வைகோ உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதனை இந்த இரண்டு எம்எல்ஏக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. வைகோவிடமே நேரடியாக இதனை தெரிவித்தவர்கள், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என தெரிவித்து பின்வாங்கியுள்ளனர். மேலும் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வைகோவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

வைகோவின் திட்டம் கனவானது

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முடிவுகள் அவரது அரசியல் பயணத்தில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முன்பு வரை திமுக கூட்டணியில் மதிமுக இடம்பிடித்த நிலையில் மதிமுகவிற்கு 29 இடங்கள் ஒதுக்க திமுக முடிவு செய்தது. இதனை ஏற்றுக்கொள்வதாக ஒரு பக்கம் வைகோ அறிவித்த நிலையில், திடீரென அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது மதிமுகவிற்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 6 இடங்களில் மட்டும் மதிமுக வெற்றி பெற்றது. 29 இடங்களில் தோல்வி தழுவியது.அதே நேரம் திமுக கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

வைகோவின் அரசியல் பயணம்

இந்த முடிவு வைகோவின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதி மட்டுமே வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்த நிலையில், தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்து மதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் தற்போது கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடித்து வந்த மதிமுக, மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது. வைகோவின் இந்த முடிவால் மதிமுகவின் எம்எல்ஏக்கள் என கூறிக்கொள்ள இருந்த 2 எம்எல்ஏக்களும் வைகோவிற்கு டாடா காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks