வட கொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட அணு ஆயுதம் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆலையை பார்வையிட்ட கிம் ஜாங் உன்

சர்வதேச தடைகளை மீறி, கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில், வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. அதில், அணு ஆயுதத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் இன்னும் பிற பெருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தளவாட உற்பத்தி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக, கிம் ஜாங் உன் அங்கு நேரில் சென்றார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, எவுகணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்த அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரியாவின் சக்திவாய்ந்த Hwasong-II ரக ஏவுகணையும் உற்பத்திப் பிரிவில் அவர் ஆய்வு செய்த படங்கள் வெளியாகி, உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

கிம் ஜாங் உன் கூறியது என்ன.?

அதைத் தொடர்ந்து பேசிய கிம் ஜாங் உன், ஏவுகணைகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும் என்றும், விரைவில் நடைபெற உள்ள 9-வது மத்திய குழு கூட்டத்தில், உற்பத்தி விரிவாக்கம் குறித்த முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

<iframe title="Tamilisai on TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் "தவெக ஆணவத்துல ஆடாதீங்க" CTR-க்கு தமிழிசை பதிலடி" src="https://www.youtube.com/embed/iqjYQI_kxPA" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

வட கொரியா செல்லும் சீன அதிபர்

இதனிடையே, மற்றொரு முக்கிய நிகழ்வாக, சீன அதிபர் ஷி ஜின்பிங், நாளை வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். சீனாவின் அண்டை நாடாக இருந்தாலும், வட கொரியா சமீப காலங்களில் ரஷ்யாவிடமே அதிக நெருக்கம் காட்டி வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கூட, ஏராளமான வட கொரிய வீரர்கள் போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில், அணு ஆயுத சக்தி கொண்ட வட கொரியா உடன் மீண்டும் உறவுகளை புதுப்பிக்கும் விதமாக, சீன அதிபர் அங்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அவர் வட கொரியாவிற்கு சென்றிருந்தார். அதன் பின்னர், 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அங்கு செல்ல இருக்கிறார்.

முன்னதாக, வட கொரியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா இருந்துள்ளது. சீனாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நட்புடன் பழகி வருகிறார். இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வட கொரிய பயணம், உலக அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Source: Read Full Article