அமெரிக்காவிற்கும் அதன் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரம்பின் அறிக்கைகளை "முற்றிலும் புனையப்பட்டவை" என்று குறிப்பிட்ட ஜார்ஜியா மெலோனி, அமெரிக்க அதிபர் தனது சொந்த நட்பு நாடுகளையே இந்த முறையில் நடத்துவதைக் கண்டு தாம் "அதிர்ச்சியும் வருத்தமும்" அடைந்ததாகக் கூறியுள்ளார்.

ட்ரம்பின் கூற்றுகள் உண்மைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்று மெலோனி வெளிப்படையாக கூறியுள்ளார். "இது நடப்பது முதல் முறையல்ல, ஆனால் இது மிகவும் வெட்கக்கேடானது," என்று அவர் கூறினார். தனது நட்பு நாடுகளுக்கு எதிராக காட்டும் அதே உறுதியை, மேற்கத்திய எதிரிகளுக்கும் அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கும் எதிராக ட்ரம்ப் ஏன் காட்டுவதில்லை என்றும் இத்தாலியப் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சில விஷயங்களுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் – மெலோனி

இத்தாலியப் பிரதமர் மெலோனி வெளியிட்ட தனது வீடியோ அறிக்கையின் தொடக்கத்தில், "சில விஷயங்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கப்பட வேண்டும். டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகள் முற்றிலும் புனையப்பட்டவை மற்றும் பொய்யானவை. உண்மையை சொல்லப் போனால், நான் மிகுந்த அதிர்ச்சியும் திகிலும் அடைந்துள்ளேன்," என்று கூறினார்.

Io e l’Italia non imploriamo mai. pic.twitter.com/sTpKlqWB67

— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 19, 2026

தனது அறிக்கையில், மேற்கத்திய நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் கொள்கைகளைக் கொண்ட பல உலகத் தலைவர்களிடம் ட்ரம்ப் ஒப்பீட்டளவில் மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக மெலோனி குறிப்பிட்டுள்ளார். நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது எளிது, ஆனால் எதிரிகளை எதிர்கொள்ளும்போது வலிமையைக் காட்டுவதில்தான் உண்மையான தலைமைத்துவம் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அவருடைய மிக வலிமையான செய்தி, அவரது அறிக்கையின் முடிவில் வெளிப்பட்டது. "அவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இத்தாலியும் நானும் ஒருபோதும் யாசிக்க மாட்டோம்." என்று மெலோனி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

“அமெரிக்க பயணத்தை ரத்து செய்வது இத்தாலிக்கு செய்யும் அவமானம்“

இதற்கிடையே, இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி, "பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கடுமையான மற்றும் அவமதிக்கும் கருத்துக்கள், மெலோனிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இத்தாலிக்குமான அவமதிப்பாகும். இந்த காரணத்திற்காக, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த எனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்." என்று பதிவிட்டுள்ளார்.

Le gravi e offensive parole del Presidente Trump nei confronti del Presidente del Consiglio Giorgia Meloni offendono tutta l’Italia. Per questo motivo ho deciso di annullare la mia visita negli Stati Uniti prevista per i prossimi 21 e 22 giugno.

— Antonio Tajani (@Antonio_Tajani) June 19, 2026

ட்ரம்ப் கூறியது என்ன.?

இத்தாலியப் பிரதமர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளக் கேட்டதாக ட்ரம்ப் கூறினார். லா7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஜி7 உச்சிமாநாட்டில் ஜார்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட கெஞ்சினார். அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. அதனால் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வேறு வழியில்லை. ஆனால் அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. ஒருவேளை நான் அவரிடம் பேசியது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும். நான் அவரிடம் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை." என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

Source: Read Full Article