EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக

EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
News Image

கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கூட்டுச் சதியால், சாலை பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே பொது பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எ.வ. வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

எ.வ. வேலுவின் இடங்களில் நடந்த சோதனை - சிக்கிய ரூ.40 லட்சம், ஆவணங்கள்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவிற்கு தொடர்புடைய அவரது சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலை வீடு மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடு உட்பட 14 இடங்களில் கடந்த 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

பின்னர் அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம், சென்னை அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.3/2026. U/s 120(B), 409, 468, 471 r/w 109 of IPC and Sections 7(c) and 13(2) r/w 13(1) (a) ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 (திருத்தப்பட்டவாறு) மற்றும் எதிரி 11ன் மீது U/s 120 B, 420, 409 r/w 109, 468, 471 of IPC and Section 7(c) r/w 12, 13(2) r/w 13 (1) (a) r/w 12 ) ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 (திருத்தப்பட்டவாறு) 24.06.2026 (இன்று) எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் மீதும் மற்றும் 9 மாநில அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் (தனி நபர்) மீதும் வழக்கு பதியப்பட்டது“ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “அவ்வழக்கானது 2022ம் ஆண்டு அரசு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பயண தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 2022ம் ஆண்டில் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக கூறுப்பட்ட குற்றச்சாட்டாகும்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பராமரிப்பு(TPR-007) உட்பிரிவு மற்றும் பிற இடங்களுக்கான பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. இதில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில், மார்ச் 25 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் ரூ.3.23 கோடி மேற்படி சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசு பணம் ரூ.3.23 கோடி மோசடி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனியார் ஒப்பந்தகாரரான A-11 இடமிருந்து முறையற்ற ஆதாயத்தை பெற்றதன் விளைவாக A-1 முதல் A-10 வரையிலான அரசு ஊழியர்கள் பொதுக் கடமையை நேர்மையற்ற முறையில் செயல்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று 25.06.2026 மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவைகள் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்துாரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 இலட்சம் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணையில் உள்ளது.“ என லஞ்ச ஒழிப்புத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எ.வ. வேலு விசாரணைக்கு ஆஜராக சம்மன்

இதனிடையே, ரூ.40 லட்சம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்ததை முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மறுத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையின்போது அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks