CPIM Shanmugam: இவரு சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோமா? - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சண்முகம்!

CPIM Shanmugam: இவரு சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோமா? - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சண்முகம்!
News Image

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக எடுத்தது. யாரும் சொல்லி எடுக்கவில்லை என அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் அமைந்த கூட்டணி

2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் சிக்கல் எழுந்தது. இதனிடையே திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவை தவெகவுக்கு ஆதரவு கொடுக்க விஜய் முதலமைச்சரானார். இந்த சூழலில் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால் தான் தவெக ஆட்சியமைத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்.

அதாவது தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டணி கட்சிகள் முன்வந்தபோது  தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது, பாஜக உள்நுழையக்கூடாது என்ற எண்ணத்தில் நான் அதற்கு சம்மதம் சொன்னதாக கூறினார். இதனை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் சண்முகம்  கடுமையாக கண்டித்துள்ளார்.

தவெகவுக்கு ஆதரவு முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் வரலாற்றில் வாக்குகள் தான் முக்கியம். திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாங்களும் சேர்ந்து தான் தோற்றோம். 3வதாக இருக்கும் ஒரே வாய்ப்பு தவெகவுக்கு இருந்தது. எந்த இடத்திலும் மே 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூடி தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது சுயேட்சையாக எடுத்த முடிவாகும். யாருடைய உத்தரவோ, ஒப்புதலிலோ இதனை எடுக்கவில்லை என நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம்.

அதேசமயம் தமிழ்நாட்டில் ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் திமுகவுடன் சேர்ந்து நாங்கள் போராடுவோம் என்பதையும் கூறினோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்றே இல்லை.

Also Read: VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?

3 மாதங்கள், 6 மாதங்கள் தான் இந்த ஆட்சி தாங்கும் என எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் சொல்வதெல்லாம் ரொம்ப தப்பான கருத்தாகும். ஒன்றே முக்கால் கோடி வாக்காளர்கள் ஓட்டு செலுத்தி தவெகவை தேர்வு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதெல்லாம் என்ன பேச்சு?.. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் யார் சொன்னாலும் அது தப்பு தான். ஆட்சிக்கு தவெக இப்போது தான் வந்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு விஷயமாக அறிந்துக்கொள்ள சில காலம் எடுக்கும். இப்படி அவசரப்படக்கூடாது.

அதேபோல் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவில் அணி மாறுவது என்பது சகஜமான விசயமாகும். இதனை தமிழக வெற்றிக் கழகம் செய்வது புதிதானது அல்ல. இந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த அலையும் ஏற்படவில்லை. அலை வீசியது என சொன்னால் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கும்” என சண்முகம் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks