போரால் தொடரும் விலை உயர்வு

ஈரான்- அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மேலும் அமெரிக்க படைகளும் ஹார்மூஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டு எந்த கப்பலும் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்து வருகிறது. இதனால் எரிபொருட்களை ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கப்பல் நடுக்கடலில் காத்துள்ளது.

இதனால் உலகம் முழுவதும் பல்வேறு நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வணிக சிலிண்டர் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வு

இந்த நிலையில் இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இன்று காலை முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அந்த வகையில் சென்னையில் ரூ.928.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.957.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் விலையேற்றம் செய்யப்பட்டிருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 89 ரூபாய் வீட்டு சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதே போல வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூன் 1 முதல் 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article