சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (28.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ்க்கண்ட பகுதிகளில், ஜூன் 28ஆம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரட்டூர்

பம்பிங் ஸ்டேஷன் உயர் மின் அழுத்த சேவை, நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம், டிஎன்எச்பி 49வது தெரு முதல் 72வது தெரு வரை, கொரட்டூர் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்

விசாலாட்சி தோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சி.வி. ராமன் சாலை, சி.பி. ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன், அபிராமபுரம், சுப்பிரமணியம் தெரு, ஆனந்தபுரம், டி.டி.கே. சாலை, டி'மாண்டி காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, சௌந்தரராஜன் தெரு, விசாலாட்சி நகர், செயிண்ட் மேரிஸ் சாலை, விநாயம் தெரு, ஜெத் நகர் மெயின் சாலை, ஜெத் நகர் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், அம்மணி அம்மாள் தெரு, பட்டம்மாள் தெரு, அருணாசலம் தெரு, நல்லியப்பன் தெரு, தேவநாதன் தெரு, திருவள்ளூர்பேட்டை தெரு, சந்திரசேகரன் தெரு, வி.கே. ஐயர் சாலை, வன்னியம்பதி தெரு, வி.சி. கார்டன் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், வெங்கடேச அக்கிரஹாரம் தெரு, ஆர்.கே. மடம் சாலை, லாலா தோட்டம், டிரஸ்ட்பாக்கம் தெற்கு மற்றும் வடக்கு, ஸ்ரீனிவாசன் தெரு, சிவராமன் தெரு ஆகிய பகுதிகளில்

நாளை காலை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகளின்போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article