" அம்மா என்னை கூட்டிட்டு போயிடுங்க " போன் செய்த சில மணி நேரத்தில் கர்ப்பிணி தற்கொலை !!

" அம்மா என்னை கூட்டிட்டு போயிடுங்க " போன் செய்த சில மணி நேரத்தில் கர்ப்பிணி தற்கொலை !!
News Image

" அம்மா என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க "

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் சிவகங்கை சாலை அருகே வசிப்பவர் ஷேக் தாவூத். இவரது மகள் 21 வயதுடைய ஆஃப்ரின். இவருக்கும் திருப்பத்தூர் மூலைக்கடை பகுதியில் வசிக்கும் முன்னாள் திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் சாக்ளா என்பவரின் மகன் 30 வயதுடைய முகமது அஷ்ரப் என்பவருக்கும் கடந்த ( ஜனவரி 25 ) ல் , 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு இருவரும் அஷ்ரப் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது ஆஃப்ரின் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த (ஜூன் 16) ஆம் தேதி இரவு தனது தாய் பாத்திமா பீவிக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு "அம்மா என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க" என தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் இரவு நேரம் என்பதால் நாளை காலை பார்த்துக் கொள்ளலாம் என ஆஃப்ரினின் தாய் அவரது மகளுக்கு ஆறுதல் கூறி விட்டு உறங்க சென்றிருக்கிறார். மறுநாள் (ஜூன் 17) ஆம் தேதி காலையில் மகளுக்கு போன் அடித்த பொழுது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேச்சு

இதனையடுத்து ஆப்ரின் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக அவரது தாயாருக்கு தகவல் வந்துள்ளது. பின்பு தாயார் பீவி தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடனடியாக திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் நகர் போலீசார், ஆப்ரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

தொடர்ந்து திருமணமாகி ஆறு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். மேலும் முகமது அஷ்ரப் தந்தை சாக்ளா திமுக நிர்வாகி என்பதால் திருப்பத்தூர், சிவகங்கை அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்தால் நியாயம் கிடைக்காது என கூறியதால் , புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆஃப்ரின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு கடந்து 19 - ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆஃப்ரினின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர்கள் குற்றவாளிகளை கைது செய்யாமல் தனது மகள் உடலை வாங்க மாட்டேன் என கூறியதை அடுத்து ஆஃப்ரின் உடல் மருத்துவமனை பிணவறை வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அஷ்ரப் போன் பார்த்து வந்த நிலையில் அடிக்கடி கணவன்  மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அஷ்ரப் தனது மனைவியை தற்கொலை தூண்டும் வகையில் பேசி வந்ததது தெரிய வந்துள்ளது. எனவே. நான்கு மாத கர்ப்பிணியான ஆஃப்ரினை, தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் முகமது அஷரப்பை திருப்பத்தூர் நகர் போலீசார் 8 நாட்களுக்கு பிறகு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks