தியாகராஜர் கோயிலில் தரிசனம்

சென்னை திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக் கோயிலில் இன்று முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பிஜேபி நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்து கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் கேக் வெட்டினார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெய்கணேஷ், மற்றும் மண்டல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ;

திருச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய விஜய் தன்னை முதல்வர் என்பதை மறந்து எதிர்க் கட்சி தலைவர் போல திமுகவுக்கும் , தமிழக வெற்றி கழகத்திற்கு தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பேசுவது விளையாட்டு தாமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் கொலை , கொள்ளை , கஞ்சா அதிகமாக இருந்ததால் மக்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் சிங்கப் பெண் துவக்கப்பட்டு எந்த வித பயனும் இல்லை. முதல்வர் தன்னை முதல்வராக எண்ணிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல் - டீசல் விலை குறைவு

பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு உலக அளவில் போர் நடைபெறுவது காரணம். போர் முடிவுக்கு வந்த பிறகு பெட்ரோல் , டீசல் விலை குறையும். இந்தியாவில் தான் பெட்ரோல் விலை குறைவு

Source: Read Full Article