விவசாயிகளே உஷார்! கால்நடைகளுக்குப் பரவும் கொடிய நோய்: தப்பிக்க ஆட்சியர் சொன்ன வழி!

விவசாயிகளே உஷார்! கால்நடைகளுக்குப் பரவும் கொடிய நோய்: தப்பிக்க ஆட்சியர் சொன்ன வழி!
News Image

நாகப்பட்டினம்: தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.

இலவசமாக நடத்தப்படும் இந்த முகாம்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கால்நடைகளும் பயன்பெறும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

40 நாட்கள் நடைபெறும் தற்காப்பு முகாம்

கால்நடைகளைப் பாதிக்கும் கொடிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9-வது சுற்று தடுப்பூசி முகாம் வரும் 01.07.2026 முதல் 10.08.2026 வரை சுமார் 40 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, கிராமங்கள் வாரியாக இலவசமாகத் தடுப்பூசி செலுத்த உள்ளனர். பிளவுபட்ட குளம்புகளை உடைய பசுக்கள், எருமைகள் மற்றும் வெள்ளாடுகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் இந்தத் தடுப்பூசி போடுவது அவசியமாகும்.

கால் மற்றும் வாய் நோயின் தீவிரத் தன்மை

கால் மற்றும் வாய் நோய் (Foot and Mouth Disease) என்பது மிகக் கொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இந்நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக மிக விரைவாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பரவக்கூடிய அதிதீவிரத் தன்மை கொண்டது. இதனால் ஒரு மாட்டுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த மந்தையையும் மிக எளிதாகத் தாக்கிவிடும் அபாயம் உள்ளது.

நோயின் முக்கிய அறிகுறிகள்

*இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் கடுமையான கொப்புளங்கள் மற்றும் புண்கள் ஏற்படும்.

*கால்களின் குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் தோன்றி கால்நடைகளால் நடக்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும்.

* கடுமையான காய்ச்சல் காரணமாகக் கால்நடைகள் சோர்ந்து காணப்படும்.

பொருளாதார இழப்பும் பாதிப்புகளும்

இந்நோய் தாக்கிய கால்நடைகள் வாயில் ஏற்படும் புண்கள் காரணமாகத் தீவனம் மற்றும் புற்களைச் சரியாக உட்கொள்ள இயலாமல் தவிக்கும். இதனால் அவை மிக விரைவாக உடல் மெலிந்து, நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்துவிடும்.

மேலும், வெயில் காலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைச்சல் (Pantings) ஏற்படும். அவற்றின் புறத்தோல் தன்மை கடினமாகவும், அடர்ந்த மற்றும் கரடுமுரடான ரோமங்களுடனும் மாறுபட்டுத் தோன்றும்.

விவசாயிகளுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்

பால் உற்பத்தி பாதிப்பு: பால் கொடுக்கும் பசுக்களுக்கு இந்நோய் தாக்கினால், அவற்றின் பால் உற்பத்தித் திறன் முற்றிலும் குறைந்துவிடும் அல்லது முற்றிலுமாக நின்றுவிடும்.

கன்றுகள் இறப்பு: நோய்த்தொற்றுள்ள பசுக்களிடம் பால் குடிக்கும் இளம் கன்றுகள், பாலின் வழியாகப் பரவும் வைரஸ் தாக்கத்தால் உடனடியாக இறந்துபோகும் நேரிடும்.

மலட்டுத் தன்மை: நோய் பாதிப்புக்குள்ளாகும் சினை மாடுகள் மற்றும் காளைகளுக்குப் பிற்காலத்தில் மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால், கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்

கால் மற்றும் வாய் நோயைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதே மிகச் சிறந்த வழியாகும். இந்நோய் வராமல் தடுத்துக் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் எனில், வருடத்திற்கு இரண்டு முறை தவாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் கிராமங்களுக்குத் தடுப்பூசி செலுத்த வரும் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களிடம் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளுக்குத் தவாமல் தடுப்பூசி போட்டு, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks