அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !

அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !
News Image

அமைச்சர் நிர்மல் குமாருக்கு வெளிச்சம் பிடிக்காது மின்வெட்டு மற்றும் இருட்டு தான் பிடிக்கும் பிடிக்கும் - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பேட்டி.

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...,"பாஜகவில் நெடுங்காலம் பயணிப்பதை நாங்கள் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பல சவால்களை சந்தித்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்து மக்களின் உணர்வுகளை மதிக்கத்தால் தான் திமுக ஆட்சியை இழந்தது. இந்து மக்களின் இறையுணர்வு, உள்ளுணர்வை ஏதோ மதக்கலவரம் போல் சித்தரிப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இதே அருளோடு, அன்போடு திருப்பாற்பகுன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று சொல்லியுள்ளார். அவர் அப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை, அவருக்கு வெளிச்சம் பிடிக்காது, மின் வெட்டு, இருட்டு தான் பிடிக்கும். அது எங்களால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.நீதிமன்றமே சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு தீர்ப்பளித்து  தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்த பின்பும், தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஆணவத்தின் வெளிப்பாடு.

பொது மக்களின் உணர்வை மத உணர்வு என கொச்சைப்படுத்துவது தவறு.

ஏதோ விசில் சத்தம் சற்று சத்தமாக கேட்டுவிட்டதற்காக, பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால் உங்கள் விசில் சத்தத்தை விட உறுதியானது, உரக்கமானது, வலிமையானது. கடந்த திமுக ஆட்சி செய்த தவறு போல் மதக்கலவரம், அமைதியை நிலை நாட்ட விரும்புகிறோம் என்று சொல்ல முடியாது. கரூர் நீங்கள் சென்று என்ன கலாட்டா செய்தீர்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். இந்துக்களின் பரந்த மனப்பான்மையை இந்த அரசு இடற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது? அந்த மக்களே தான் உண்ணாவிரதம் இருந்தார்கள். பொது மக்களின் உணர்வை மத உணர்வு என கொச்சைப்படுத்துவது தவறு.

பெண்கள் பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது என்று தான் அர்த்தம்.

மின்சாரத் துறையில் ஊழலே இல்லை என்று சொன்னார்கள். 26 ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக சொன்னார்கள். ஆனால் ஒரு சில ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக தான் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே ஊழலை காப்பாற்றுவதில் இவர்களும் ஊக்கமாக இருக்கிறார்கள். 717 டாஸ்மாக் கடையை மூடினாலும் மனமகிழ் மன்றம் திறந்து தான் உள்ளது. கடை மூடிய இடத்தில் தனியார் பார்கள் திறக்கப்படுவதாக செய்திகள் வருகிறது. டாஸ்மாக் கடையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் திறந்திருக்கும் ஆனால் திறந்திருக்காது. மூடி இருக்கும் ஆனால் மூடி இருக்காது இதுதான் கதை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பெண்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. முதலில் தமிழக சிங்கப்பெண்களை காப்பாற்றாமல், சிங்கப்பெண் திட்டத்தை தொடங்குவேன் என்று சொல்வது பெண்கள் பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது என்று தான் அர்த்தம்.

அண்ணாமலை இயக்கத்தில் பாஜக வினர் தான் அதிகம் இணைந்துள்ளதாக செய்திகள் வருவது குறித்த கேள்விக்கு

எங்கள் கட்சியாகில் லட்சியவாதிகள் உள்ளார்கள்.அங்கே லட்சம் பேர் இருப்பதாக சொல்வதை நான் பொருட்படுத்தவே இல்லை. எங்கள் கட்சி தொண்டர்கள் இரத்தம், வியர்வை சிந்தி வளர்த்தவர்கள், வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஆட்சியில் அமர வைக்க போகிறவர்கள்.  எந்த இளைஞர்களும் அவரிடம் செல்லவில்லை, சுய நலவாதிகள் தான் சென்று இருப்பார்கள், பொது நல வாதிகள் யாரும் செல்லவில்லை. அவருக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. எங்கள் கட்சி உறுதியாக உள்ளது.தாமரையில் ஒரு இதழை கூட யாராலும் அசைக்க முடியாது. தாமரை பொற்றாமரையாக 2031 ஆம் ஆண்டில் ஆட்சியில் வீற்றிருக்கும். போனவர்களை பற்றி கவலையில்லை,  இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அதிமுக எதிர்காலம் குறித்த கேள்விக்கு

அதிமுக எதிர்காலம் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அந்தந்த கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும். இன்னொரு கட்சியில் இருந்து புள்ள பிடிப்பதில் கவனம் செலுத்தாமல், ஆட்சியை பிடித்து வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிமுக வினரிடம் பேரம் பேசப்பட்டதா?

என்ன பேரம் என்று தெரியவில்லை, ஆனால் பேரம் உள்ளது" என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks