முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி

முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
News Image

முகநூலில் வந்த Friend Request

கன்னியாகுமாரி மாவட்டம் பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிவிளை அருகே புரவூர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் குமார் ( வயது 44). இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு விஷ்ணு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

இவர் 15 வருடங்கள் சவுதி அரேபியா நாட்டிலும் அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாய் நாட்டிலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் துபாயில் பணி புரியும் இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் பெண்ணின் புகைப்படம் வைத்திருக்கும் முகநூல் பக்கத்தில் இருந்து பிரெண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அதை சதிஷ் குமார் அக்செப்ட் செய்த பின்பு நட்பாக சாட்டிங் ஆரம்பித்து நாள் செல்ல செல்ல காதலும் காமமும் கலந்த சாட்டிங் இருவருக்குமிடையே பரிமாற தொடங்கியது.

Screen Shot எடுத்து மிரட்டல்

ஒரு கட்டத்தில் மறுபுறம் தேவிகா எஸ் நாயர் என்ற பெயரில் இருந்த நபர் சாட்டிங் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சதீஷ் குமாருக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல கட்டங்களாக வெளிநாட்டில் இருக்கும் சதீஷ் குமாரிடம் கேட்கும் போதெல்லாம் சட்ட விரோத பணப் பரிவரத்தனை முறையில் பணத்தை அனுப்பி கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென முன் பின் தெரியாத கேரளா மாநிலம் ஆட்டிங்கல் பகுதியை சேர்ந்தவர் என கூறி ராஜீவ் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பின்னர், தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் மூலம் இருவரும் சாட்டிங் செய்த ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் ஆக சதீஷ் குமாரின் நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சதீஷ் குமாரின் மனைவி விஷ்ணு பியாவுக்கும் வாட்ஸ்அப் மூலமாகவும் நேரடியாகவும் தெரியப்படுத்தாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சதீஷ் மற்றும் மனைவி விஷ்ணு பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஷ்ணு பிரியா கணவன் சதீஷ் குமாரை பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை

துபாயில் இருந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஊர் திரும்பிய சதீஷ் குமார், மனைவியிடம் சென்று சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் மனைவி கணவன் சதீஷை பார்க்கவோ பேசவோ விரும்பாமல் இருந்துள்ளார். மிகுந்த மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் கடந்த மே 17 ஆம் தேதி புதிதாக தான் கட்டி குடும்பத்துடன் குடியேறிய சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து தற்போது தேவிகா எஸ் நாயர் என்ற முகநூல் பக்கம் டெலிட் செய்த மர்ம கும்பல், ராஜீவ் என்ற பெயரில் தொடர்பு கொண்ட மொபைல் எண்ணையும் சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சதீஷ் குமாரின் தாய் பளுகல் காவல் நிலையம் கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்த மர்ம கும்பலை கண்டு பிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்து தீர்விற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks