தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாங்கள் எந்த நிர்பந்தமும் தரவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல எந்த பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரமாகவும் அதை கடந்து செல்ல முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல” என்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் த.வெ.க வினர் அதிமுக எம்.எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என்கிற கேள்விக்கு, யூகமான கேள்விகளுக்கு யூகமாக பதில் சொல்ல முடியாது நாங்கள் தவெ.க ஆட்சி அமைப்பதற்கு உறுதியாக இருக்கிறோம். இந்த ஆட்சி ஐந்தாண்டு தொடர வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஊசலாட்டமும் இல்லை என்று பதிலளித்தார்.

மேலும், “மதிமுக விவகாரம் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மெல்ல மெல்ல தனியார் மையம் படுத்துவது தொடர்ந்து ஒன்றிய அரசு செய்கிறது. அவ்வாறு விற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு அதை வாங்கி கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜீனா, புஸ்ஸி ஆனந்த ஆகியோர் நேற்று சந்தித்தார்கள். முறைப்படி அனைத்து ஆதரவு தருகிற கட்சிகள் அனைத்து தோழமை கட்சிகளுக்கும் இந்த அழைப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும் அந்த நிகழ்விலே முதலமைச்சர் பேசுவார். த.வெ.க கூட்டணிக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்கும் கூட்டமாக அது இருக்கலாம். கூட்டம் முடிந்த பின்பு தான் அது குறித்து தெரியும்.

கரூரில் உயிரிழந்த மக்களை முதலமைச்சர் என்ற முறையில் இந்த மக்களை சந்தித்திருக்க வேண்டும் அவர்கள் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது. இடைத்தேர்தலில் நான் பங்கேற்க போவதில்லை. ஆனால் ஊடகங்கள் யூகங்களாக செய்திகளை பரப்புகிறார்கள். த.வெ.கவிடம் எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கவில்லை ஊடகங்களே பரப்புகின்றன. அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அது உண்மையா இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

Source: Read Full Article