சித்தி - மகன் உறவை மீறி காதல்

பீகார் மாநிலம் ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அதில் மூத்த சகோதரியின் மகன் வாலிபர் கோலு சிறுவதில் இருந்தே அடிக்கடி அவரது தாத்தா வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது தனது சித்தியான மம்தா குமாரிக்கும் கோலுவிற்கும் இடையே சித்தி மகன் என்ற உறவை கடந்து காதல் ஏற்பட்டுள்ளது.

பார்க்க கூடாத காட்சியை பார்த்த ஆத்திரம்

இருவரும் தொடர்ந்து நெருக்கமாக பழகி காதலித்து வந்த நிலையில் உறவினர்கள் என்பதால் இவர்களின் நடத்தையின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்துள்ளது. காதலித்து வந்த இருவரும் நாளடைவில் அவ்வப்போது தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பண்டிகை காலங்களை அனைவரும் குடும்பமாக சேர்ந்து ரோஹிவா பகுதியில் உள்ள வீட்டில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது போல் கடந்த வாரம் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

அப்போது கோழுவும் தனது தாயுடன் அங்கு சென்றிருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் மம்தாவுடன் அடிக்கடி வெளியில் சென்று வந்திருக்கிறார். மேலும் இரவில் தனிமையில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் எதிர்பார்த்த விதமாக ஒரு நாள் இரவு மம்தா குமரியின் தந்தை அவரது அறைக்கு மருந்து எடுக்க சென்ற போது மம்தாவையும் கோலுவையும் பார்க்க கூடாத நிலையில் பார்த்து ஆத்திரமடைந்த உள்ளார். பின்னர் இருவரையும் அடித்து சத்தமிட்ட நிலையில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் கூடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கிராமத்தில் இது குறித்து பஞ்சாயத்து நடத்திய நிலையில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து மம்தா மற்றும் கோலுவை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். தாயின் சொந்த தங்கையுடன் , மகன் உடலுறவில் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article