மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
News Image

மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனிமவளகொள்ளை நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள்  ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துவருகின்றனர். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டி.கே.பிரபு உறுதி.

பாராட்டு விழா

மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மையத்தின் சார்பாக மதுரையில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே பிரபு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜுவ், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லணை,  தங்கபாண்டியன்,  கோபிசன், கார்த்திகேயன் , வி.எம்.முஸ்தபா, விஜய் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜீவ்...," இரு கட்சிகளை தாண்டி வர முடியாது என்றார்கள் ;  ஆனால் நாங்கள் லட்சியத்தோடு இருந்தோம் வெற்றிபெற்றோம்; முதலமைச்சர் சொல்லிவிட்டார் நமது அரசு மக்களுக்கு வெளிப்படைதன்மை மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தொழில்முனைவோர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்கும் இந்த அரசு உதவியாக இருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பார்கள் இன்று ராமநாதபுரத்தின் வளர்ச்சி எங்கயோ சென்றுவிட்டது. ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியான மாவட்டமாக மாற்ற இந்த அரசு உறுதுணையாக இருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 90% குடிநீர் உப்புத்தண்ணீராக தான் உள்ளது. எங்கள் எதிரியே  இந்த ஒரு முறை பிளாஸ்டிக் பாட்டில் ( வாட்டர் பாட்டில்) இனிவரும் காலங்களில் கண்ணாடி கிளாஸ், சில்வர் பாட்டில்களை பயன்படுத்தவும் இதனை ஒரு நண்பராக, அமைச்சராக வேண்டுகோள் விடுக்கிறேன்: எங்களது துறை சார்ந்து புதுமையான திட்டங்களை கொண்டுவரவுள்ளோம், நகராட்சி குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரிக்கவுள்ளோம்; உங்களிடம் இருந்து மாற்றம் கொண்டுவருவோம் உங்களது தொழில்நிறுவனங்களில் பிளாஸ்டிக் FREEZONE ஆக மாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு மேடையில் பேசாமலே புறப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...,"

மண் எம்- சாண்ட் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பான கேள்விக்கு?

தமிழகத்தில் மண் , எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவலை உருவாக்குகிறார்கள்.

கிரானைட் குவாரிகள் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படுமா?

அது தொடர்பாக பகுப்பாய்வு ( analyze) செய்துவருகிறோம்

விதிமுறைக்கு உட்பட்டு கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு

மாநில அளவில் குவாரிகள் தொடர்பாக ஆய்வு செய்துவருகிறோம். குவாரிகள் விதிமீறல்கள் குறித்து முழுவதுமாக ஆய்வு செய்து அதற்கான தீர்வு கிடைக்கும். மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனிமவளகொள்ளை நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள்  ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துவருகின்றனர். அந்த அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

ஆய்வு முழுவதும் ரீல்ஸ்க்காக செய்கிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு?

விமர்சனமெல்லாம் இருக்கதான் செய்யும்

முன்னாள் அமைச்சர்கள் குவாரிகளில் ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு?

தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks