Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!

Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
News Image

உலக கிரிக்கெட்டில் சில வீரர்கள் எப்போதும் தவிர்க்க முடியாத வீரர்களாக திகழ்வார்கள். அப்படி ஒரு கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு:

மறக்க முடியாத பல இன்னிங்ஸ்களை ஆடியுள்ள பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியுடன் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற உள்ளார். இன்னும் ஒரு நாள் மட்டுமே இந்த போட்டி எஞ்சியுள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற உள்ளார்.

தலைசிறந்த ஆல்ரவுண்டர்:

35 வயதான பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர். ஆனால், இவர் கிரிக்கெட் ஆடுவது இங்கிலாந்து அணிக்காக ஆகும். 122 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 219 இன்னிங்சில் 7 ஆயிரத்து 234 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 258 ரன்கள் எடுத்துள்ளார். 37 அரைசதங்கள், 14 சதங்கள், 1 இரட்டை சதங்கள் விளாசியுள்ளார்.

114 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 463 ரன்கள் எடுத்துள்ளார். 24 அரைசதங்கள், 5 சதங்கள் விளாசியுள்ளார். 43 டி20 போட்டிகளில் ஆடி 585 ரன்கள் எடுத்துள்ளார். 45 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 935 ரன்கள் எடுத்துள்ளார். தலைசிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 252 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும், டி20 யில் 26 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

மறக்க முடியாத ஆட்டம்:

இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை வென்றதற்கு முக்கிய காரணம் பென் ஸ்டோக்ஸ் ஆவார். மேலும், பல மறக்க முடியாத இன்னிங்சை ஆடிய பென்ஸ்டோக்ஸ் 4வது இன்னிங்சில் ஆஸ்திரலியா நிர்ணயித்த 362 ரன்கள் இலக்கை தனி ஆளாக போராடி வெற்றி பெற வைத்திருப்பார். 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தோல்வி என்று ஆஸ்திரேலியா கருதிய நிலையில், தனி ஆளாக லீச்-சை மறுமுனையில் வைத்துக்கொண்டு வெற்றி பெற வைத்திருப்பார். அந்த இன்னிங்சில் 219 பந்துகளுக்கு 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 135 ரன்களை அவர் விளாசி ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைத்தார். இன்றளவும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் இன்னிங்சில் அதுவும் ஒன்றாகும்.

நியூசிலாந்து அணிக்காக சிறு வயதில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து மட்டுமின்றி, இங்கிலாந்து லயன்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் லெவன், மெல்போர்ன் ரெனெகெட்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், கான்டர்பெர்ரி, ராஜஸ்தான் ராயல்ஸ், டீம் ஸ்டோக்ஸ், டீம் மோர்கன், சன்ரைசர்ஸ் லீட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks