Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்

Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
News Image

டெல்லி சென்ற பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, தான் பாஜகவிலிருந்து விலகும் கடிதத்தை, தேசிய தலைமையிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதே நேரத்தில், அவர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், அவர் ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதனால், அண்ணாமலையே மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜினாமா கடிதம் வழங்கினாரா அண்ணாமலை.?

டெல்லி சென்ற பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இந்த செய்திகளை மறுத்துள்ளனர். மேலும், அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து , அவருக்கு ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார்.

அமித் ஷா போட்ட உத்தரவு - டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்

இந்நிலையில், அமித் ஷாவை சந்தித்த போது, தமிழக பாஜகவில்  என்ன நடக்கிறது.? தேர்தலில் தோற்றதற்கான காரணங்கள் என ஒரு அறிக்கையை அண்ணாமலை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு ஏற்றார்போல், அமித் ஷாவும், பாஜக தமிழ்நாடு தற்போதை தலைவர் நயினார் நாகேந்திரனை, உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும், அவரும் உடனடியாக அங்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை மீண்டும் தலைவராகிறாரா.?

இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் பதவி பறிபோகும் என்ற தகவல்கள் உலா வரத் தொடங்கிவிட்டன. மேலும், அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்காமல், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஏற்கனவே பாஜக தலைமை ஈடுபட்டுள்ள நிலையில், அவரையே மீண்டும் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.

என்ன செய்வார் அண்ணாமலை.?

இதனிடையே, அண்ணாமலை கட்சி தொடங்குவது உறுதி என்ற தகவலும் ஒருபுறம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அவரது கட்சி, தமிழ் அடையாளத்தை தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைத்து, எதிர்க்கட்சிகளை எதிர்க்கும் அதே வேளையில், கொள்கை அடிப்படையிலான ஒரு கட்சியை உருவாக்க எண்ணுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் கடந்த சில மாதங்களாக இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

சமீபத்திய தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அண்ணாமலை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. கூட்டணிகளை சார்ந்திருப்பதை விட, மாநிலத்தில் ஒரு சுதந்திரமான அமைப்பு ரீதியான அடித்தளத்தை உருவாக்குவதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த பிளவுக்கான அண்ணாமலையின் காரணமாகும்.

மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை கருத்து

அவரது அதிருப்தியை எடுத்துக் காட்டும் இன்னும் ஒரு நிகழ்வும் சமீபத்தில் நடந்தது. சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிகளை கட்டாயமாக்கிய மத்திய அரசின் நடவடிக்கை, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கவலையளிக்கிறது என்று அண்ணாமலை சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதையடுத்து, அவரது எதிர்காலம் குறித்த யூகங்கள், அதாவது புதிய கட்சி தொடங்குவதற்கான எண்ணங்கள் உள்ளதா என்ற பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன.

இத்தகைய நிகழ்வுகளால், அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பது தெரியவந்தாலும், தற்போது அவரிடம் பேசப்பட்டுள்ள என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஒருவேளை, பாஜக மேலிடம் அவரை சமாதானப்படுத்திவிட்டதா, அல்லது அண்ணாமலை அவரது முடிவில் தெளிவாக உள்ளாரா என்பது, அவர் சொன்னது போல், நாளை மறுநாள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks