வயிற்றுக்குள் 5 ஆண்டுகளாக தூங்கிய கத்தரிக்கோல்!

வயிற்றுக்குள் 5 ஆண்டுகளாக தூங்கிய கத்தரிக்கோல்!

கருப்பை அறுவை சிகிச்சையில் அரங்கேறிய 'மெடிக்கல் கிரைம்'! நரக வேதனையில் சிக்கிய பெண்ணுக்கு மறுபிறவி!

ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரங்கேறியுள்ள ஒரு 'மெடிக்கல் நெக்லிஜன்ஸ்'  சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உறைய வைத்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட உஷா ஜோசப் குட்டி (51) என்ற பெண்ணின் வயிற்றில், மருத்துவர்கள் பயன்படுத்திய சர்ஜிக்கல் கத்தரிக்கோல் சுமார் ஐந்து ஆண்டுகளாக இருந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. உயிரைக் காக்க வேண்டிய மருத்துவர்களே, நோயாளியின் வயிற்றுக்குள் ஆபத்தான ஆயுதத்தை வைத்துத் தைத்த இந்த 'ப்ளண்டர்', மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நாள் முதலே, உஷாவிற்குத் தொடர்ச்சியான வயிற்று வலியும், சிறுநீரில் ரத்தக்கசிவும் ஏற்பட்டு வந்துள்ளது. சாதாரண இன்ஃபெக்‌ஷன் என நினைத்து பல மருத்துவமனைகளில் 'கன்சல்டிங்' செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வலி தாங்க முடியாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவர்கள் 'ஷாக்' ஆகிவிட்டனர். அவரது வயிற்றுப் பகுதிக்குள் அந்த கத்தரிக்கோல் பதுங்கியிருப்பது ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவரை 'எமர்ஜென்சி' வார்டில் அனுமதித்து, மீண்டும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அந்த 5 வருட கத்தரிக்கோலை மருத்துவக் குழுவினர் 'ரிமூவ்' செய்துள்ளனர்.


தற்போது உஷா அபாய கட்டத்தைத் தாண்டி 'அப்சர்வேஷன்' அறையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் நடந்த இந்த 'க்ரிமினல்' அளவிலான அலட்சியம் குறித்து கேரள சுகாதாரத் துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 'சர்ஜன்' மற்றும் 2021-ல் பணியில் இருந்த மருத்துவக் குழுவினர் மீது துறைரீதியான 'சஸ்பென்ஷன்' மற்றும் போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏழை எளிய மக்கள் நம்பிச் செல்லும் மருத்துவமனைகள் இப்படி அலட்சியத்தின் உச்சமாகச் செயல்படுவதைக் கேரள சமூகம் கொந்தளிப்புடன் விவாதித்து வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks