Coimbatore Porcupine Rescue: குடியிருப்புக்குள் புகுந்த அரிய வகை முள்ளம்பன்றி - வன ஆர்வலர்கள் ஆபரேஷன் வெற்றி!

Coimbatore Porcupine Rescue: குடியிருப்புக்குள் புகுந்த அரிய வகை முள்ளம்பன்றி - வன ஆர்வலர்கள் ஆபரேஷன் வெற்றி!
கோவையில் பரபரப்பு; நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் பத்திரமாக விடுவிப்பு!


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று மாலை திடீரென அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி ஒன்று நுழைந்ததால், வீட்டில் இருந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்து அச்சத்தில் உறைந்தனர். ஊருக்குள் காட்டு விலங்கு புகுந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


குடியிருப்புவாசிகள் இது குறித்து உடனடியாக 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் வைல்ட் லைஃப்' என்ற அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன உயிரின ஆர்வலர்கள், வீட்டில் பதுங்கியிருந்த முள்ளம்பன்றியைப் பிடிப்பதற்காக நீண்ட நேரம் போராட்டத்தை மேற்கொண்டனர். 

அதன் முட்களைக் கருத்தில் கொண்டு மிகவும் லாபகரமாகச் செயல்பட்ட அவர்கள், இறுதியாக அந்த முள்ளம்பன்றியைச் சாக்குக்குள் அடைத்துப் பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட அந்த அரிய வகை உயிரினத்தைக் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 வனத்துறையினரின் ஃபாலோ-அப் ஆக்‌ஷனாக, முள்ளம்பன்றி உடனடியாகத் தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. நகர்ப் பகுதிக்குள் முள்ளம்பன்றி நுழைந்த இந்தச் சம்பவம், வனப்பகுதிகளின் எல்லைகள் குறைந்து வருவதை உணர்த்துவதாக வைல்ட்-லைப் எக்ஸ்பர்ட்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks