குடி நோயாளிகளை உருவாக்கிய அரசுதான் குற்றவாளி: கஞ்சா, டாஸ்மாக் ஒழிப்புக்குத் தீர்வு காணக் கோரிக்கை!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிய வந்த பா.ம.க. மாநிலப் பொருளாளர் திலகபாமா அவர்கள், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் நடந்ததைப் போல, முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாணவி வன்கொடுமை விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திலகபாமா பேசுகையில், சம்பவத்திற்குக் காரணம் இளைஞர்களை 'குடி நோயாளிகள்' ஆக்கிய தமிழக அரசுதான் என்று குற்றம் சாட்டினார்:
இன்றைக்குச் சுடப்பட்டுச் சிறையில் வைத்த அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ள தமிழக அரசுதான் குற்றவாளி என்று நான் பார்க்கிறேன். முதல்வர் கரூரில் நடந்த சம்பவத்திற்கு எல்லாத்துக்கும் போன் செய்து சாரி கேட்டார், தற்பொழுது இந்தப் பெண்ணிற்கு ஃபோன் செய்து சாரி கேட்பாரா?
முதல்வர் தனது மன்னிப்பில், என்னால் தான் குடித்தான், என்னால் தான் நிதானம் இல்லாமல் உன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். என்னால் தான் இவ்வளவு சீரழிந்து கிடக்கிற, என்னால் தான் ஒரு பெண்ணிற்கு கூடப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. அதனால் என்னை மன்னித்துவிடு, என்று பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிறக்கும்போது நல்ல குழந்தையாகத் தான் பிறக்கிறது. ஆண், பெண் வேதம் இன்றி வளர்கிறது. எங்கு குடி, குடி நோயாளியாக மாறுகிறான்? இந்தச் சமூகம் என்ன பாதுகாப்பு வழங்கி உள்ளது. டாஸ்மாக் கடையில் அள்ளி, அள்ளி கொடுத்துவிட்டு இப்பொழுது அந்த போதை பத்தாமல் கஞ்சா, அனைத்திற்கும் தேவையை ஏற்படுத்திவிட்டீர்கள்.
இலங்கையும், தமிழகமும் அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டி விட்டனரோ? அதற்குத் தமிழக அரசு உடன் போகிறதோ? என்ற சந்தேகத்தை உருவாக்கும் இடத்தில் இருக்கிறோம். மூன்று பேரைச் சுட்டுப் பிடித்த அவர்களுக்குத் தண்டனை வழங்குங்கள் என்று கேட்பதைவிட, அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி வைத்து உள்ள தமிழக அரசு, முதல்வருக்கு யார் தண்டனை கொடுக்கப் போகிறார்?
மாநகர காவல் ஆணையரிடம் வைத்த கோரிக்கை, "போதைப் பொருள் ஒழிப்பிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இதை ஒழிக்காமல் மூன்று பேரைச் சுட்டு என்ன ஆகப் போகிறது? மூன்று பேர் 300 பேராக ஆவார்கள். சிசிடிவி இல்லாதது சட்ட விரோத மது விற்பனைக்கு வழி வகுப்பதாகவும், மதுவை விற்பது அரசின் கொள்கை என்றும், சாராயக் கடைகளுக்கு அரசு காவலுக்கு நிற்பதாகவும் குற்றம் சாட்டினார். திலகபாமா, இந்தச் சம்பவம் ஒரு தற்காலிக வழக்கல்ல என்று குறிப்பிட்டார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது நியாயமாக இருக்க வேண்டும். யாரையோ பிடித்து உள்ளே போடுகிற வாய்ப்பு இருப்பது அனைவருக்கும் தெரிகிறது. என்கவுண்டர் செய்து வழக்கை முடிப்பதற்கு வாய்ப்பும் இருப்பதாகவும் தெரிகிறது. சரியான நடவடிக்கை எங்களுக்கு வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும்.
தற்காலிகமாக இந்த வழக்கிற்கு மட்டும் நியாயமாக இருக்கக் கூடாது. தொடர்ச்சியாக இளைஞர் பெண்ணுக்குப் பாதுகாவலராக இருப்பார், பெண் பத்திரமாக நடமாட முடியும், குடி நோயாளி ஆக மாட்டான் என்கின்ற உத்திரவாதத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்," என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதை விட, இந்த விஷயத்திற்கான தீர்வை அடுத்த எனது தலைமுறைக்கான தீர்வு நோக்கிப் பயணப்படுவதாக கூறினார்.
